செய்திகள்

சென்னை குடிநீர் வழங்கல் வரி செலுத்த கடைசி நாள் மார்ச் 31

சென்னை, பிப்.27–

2020–-21–ம் வருடத்தின் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் சென்னைக் குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த கடைசி நாள் மார்ச் 31–ந் தேதி ஆகும்.

தலைமை அலுவலகம், பகுதி மற்றும் பணிமனை அலுவலக வசூல் மையங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். நுகர்வோர் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், நுகர்வோர் தங்களது நிலுவை தொகையினை https://chennaimetrowater.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைனில் செலுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தலைமை அலுவலக முகவரி – நகர் நிர்வாக அலுவலகம், சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை -–28 ஆகும்.

இத்தகவலை சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *