பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணப்படத்தின் இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக், புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டது.
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘மலர்’ டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண், அதே சமூகத்தைப் போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை.
கயல்விழி என்ற புதுமுகம், மலர் நாயகியாக அறிமுகம். இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா, ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அனீஷ் ஒளிப்பதிவில் விசு இசையில் ‘ருச்சி சினிமாஸ்’ அண்ட் ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்க, பி.சுமித்ரா தயாரித்து இருக்கிறார் என்று தகவல் தந்தார் பத்திரிகை தொடர்பாளர் யுவராஜ்.