புதுவை, ஜன.26
புதுவையில் முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து முன்னிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.
உப்பளம் இந்திரா காந்தி திடலில் இன்று காலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வந்தார். அவரையும் மற்றவர்களையும் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து , பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் வந்தனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசார் , முன்னாள் ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.
பின்னர் மேல்நிலைப் பள்ளிக் கூடங்களுக்கு விருதுகள் , சிறப்பாக பணியாற்றிய பெண் ஆய்வாளர் ஜானகி, உதவித் துணை ஆய்வாளர் ரிச்சர்டு ஆகியோருக்கு விருதுகள், கோவிட் காலத்தில் சிறந்த மக்கள் பணியாற்றிய பணியாளர்கள் , மருத்துவர்களுக்கு விருதுகள் ஆகியவற்றை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வழங்கினார்.
அதன் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.