சினிமா

பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் “கமலி from நடுக்காவேரி”.

Spread the love

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’.

ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

இதன் படபிடிப்பு முடிவடைந்ததும், கதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி வாங்கியது அரபு வாய்ந்ததாக உள்ளது.

இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஸ்ரீரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு:அபுண்டு ஸ்டுடியோஸ்-பி-லிட், கதை,திரைக்கதை,வசனம் இயக்கம் ராஜசேகர் துரைசாமி, இசை: தீனதயாளன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *