வர்த்தகம்

செங்கல்பட்டில் ஜாகோ ஹெல்த் நிறுவனத்தின் 3 புனரமைப்பு மருத்துவ மையங்கள்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திறந்தார்

செங்கல்பட்டு, மார்ச் 1

புனரமைப்பு மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக ஜாகோ ஹெல்த் நிறுவனம் மூன்று அதிநவீன சிகிச்சை மையங்களை செங்கல்பட்டில் துவக்கி வைத்தது. செங்கல்பட்டு ஜீவன் மருத்துவமனை, ஜே.எஸ்.பி. மருத்துவமனை மற்றும் சாய் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில் இயங்க துவங்கிய இந்த மையங்களை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த அதிநவீன புனரமைப்பு சிகிச்சை மையங்கள் செங்கல்பட்டு வாழ் மக்களுக்கு மிக முக்கியமான சேவைகளை வழங்கும். இந்த மூன்று மருத்துவமனைகளின் தலைவர்கள் ஓ.வி. ஜெயக்குமார், அகிலன், எம்.சி.ஆறுமுகம், ஏ.எம். இந்திரா ஆகியோருடன் 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜாகோ ஹெல்த் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான சஞ்சய் முரளி பேசும்போது, மிக நல்ல சிகிச்சை பலன்களை அளிக்கும் ஜாகோ தெரபியில் எங்களுக்கு திடமான நம்பிக்கை இருந்தாலும், ஒரு புதிய தொழில்நுட்பத்தை, அதிலும் மருத்துவ தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் ஜெயக்குமார், அகிலன், ஆறுமுகம், இந்திரா போன்ற தொலைநோக்குடைய மருத்துவர்களின் ஒத்துழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் செங்கல்பட்டில் உள்ள பொதுமக்களுக்கு பல வகையில் ஜாகோ தெரபி சென்றடையும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *