செய்திகள்

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,118 ஆக குறைந்தது

புதுடெல்லி, டிச.1–

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் ஒருநாள் பாதிப்பு 31,118 ஆக குறைந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:–

இந்தியாவில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 94 லட்சத்து 62 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 482 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 37 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது. இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 41 ஆயிரத்து 985 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 88 லட்சத்து 89 ஆயிரத்து 585 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது நாட்டில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 603 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து 69 ஆயிரத்து 322 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 14 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 298 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *