சென்னை, பிப். 20–
இந்தியன் வங்கி புதியதாக தொழில் துவங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, இந்த நிறுவனர்களை ஆய்வு செய்து தகவல் தரும் இந்திய விஞ்ஞான இன்ஸ்டியூட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியன் வங்கி பொது மேலாளர் சுதாகர் ராவ் மற்றும் யதீஷ்வர் டிராவிட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
ஐஐஎஸ், பெங்களூரு அமைப்பு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றின் செயல்பாட்டுக்கு தர அந்தஸ்து வழங்குகிறது.
புதிய தொழில் துவங்கும் இந்த நிறுவனர்களுக்கு இந்தியன் வங்கி ஆதரவு அளிக்கும். ரூ.50 கோடி வரை கடன் வழங்கப்படும்.
இந்தியன் வங்கி புதிய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு திறமை பயிற்சியளிக்க ஏற்பாடு செய்து, கடன் வழங்கி வருகிறது. உள்நாட்டு மொழியில் இந்தியன் வங்கி பயிற்சி அளிக்கிறது.