செய்திகள்

கொரோனா பரிசோதனை: இந்தியாவில் 10 கோடியை தாண்டியது

புதுடெல்லி, அக்.23–

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 77,61,312 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 69,48,497 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,95,509 பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,17,306 பேர் பேர் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 54,366 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 73,979 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 690 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 89.53 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது. மொத்தமாக இதுவரை 10,01,13,085 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,42,722 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *