வாழ்வியல்

சென்னையில் நான்கில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தேசிய காச நோய் நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னையில் 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது.

சென்னையில் 12,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் ஆய்வு நடத்தியது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ‘எலிசா’ பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கண்டறியப்படுகிறது.

“இந்திய அளவில் நான்கில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 23 விழுக்காட்டினருக்கும் மும்பையில் 57 விழுக்காட்டினருக்கும் புனேவில் 50 விழுக்காட்டினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது,” என்று ஆய்வை மேற்கொள்ளும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முழுமையாக முடிவடைந்த பிறகு தான் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பது தெளிவாக தெரியவரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *