வாழ்வியல்

அலர்ஜி அரிப்பு நீக்கி தோலுக்குப் பொலிவைத் தரும் அற்புத மூலிகைச் செடி ‘தேள்கொடுக்கு’

பூச்சிக்கடியால் ஏற்படும் தடிப்பு, வீக்கம், கீறல், அரிப்பு போன்றவை பகலில் குறைந்தும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகரித்தும் விடும். இவை சில நேரங்களில் சிகிச்சைக்குக் கட்டுப்பட்டோ அல்லது தானாகவோ குணமடைகின்றன.

தேள்கொடுக்கு (Heliotropium)

பல நேரங்களில் நோய் தீவிரமடைந்து தோலில் கறுப்பு, சிவப்பு புள்ளிகளையும் தோல் மாற்றத்தையும் உண்டாக்குகின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள ஒவ்வாத பொருட்களும் அரிப்பு அதிகமாக காரணமாகின்றன.

ஒவ்வாமை, அரிப்பு நீக்கி தோலுக்குப் பொலிவைத் தரும் அற்புத மூலிகைச் செடி ‘தேள்கொடுக்கு’.

இவை பூச்சிக்கடியால் தோன்றும் விஷத்தை முறிக்கும் தன்மை உடையன.

தேள்கொடுக்கில் சிறு தேள்கொடுக்கு, பெருந்தேள்கொடுக்கு என இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டும் ஒரே மருத்துவ குணத்தைக் கொண்டவை. முதலில் தேள்கொடுக்கு இலை மற்றும் பூங்கொத்துகளை உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: 20 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர வேண்டும். இலையை கசக்கி பூச்சிகடித்த இடங்களிலும், தடிப்புள்ள இடங்களிலும் தடவிவர தடிப்பு குணமாகும்.

நாட்டுப்புற மருத்துவத்தில் தேள்கொடுக்கு செடியின் இலைகள் தேள்கடி விஷத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன.

தேள் கடித்த இடத்திலுள்ள தோல் பகுதியில் இதன் இலைச்சாறை பிழிந்து தடவுவதும் வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *