செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்வு

சென்னை, நவ. 6–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு உயர்ந்து 69 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *