செய்திகள்

திருநங்கைகளுக்காக உத்தரப்பிரதேசத்தில் உதயமாகும் முதல் பல்கலைக்கழகம்

Spread the love

கோரக்பூர், டிச.26-

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், நாட்டின் முதலாவது திருநங்கை பல்கலைக்கழகம் உருவாகிறது. அகில இந்திய திருநங்கை கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதை கட்டி வருகிறது.

இங்கு திருநங்கைகள், முதலாம் வகுப்பில் இருந்து முதுகலை பட்டப்படிப்புவரை படிக்கலாம். ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிஎச்.டி. பட்டமும் பெறலாம் என்று அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் கல்வி வசதி பெறுவதற்காக இந்த பல்கலைக்கழகம் துவக்கப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.

ஜனவரி 15-ந்தேதி, 2 குழந்தைகளுடன் முதலாம் வகுப்பு தொடங்கும் என்றும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இங்கு 1–ம் வகுப்பில் சேரும் திருநங்கைகள் பள்ளிப் படிப்பை முடித்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வரை படிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கங்கா சிங் குஷ்வாகா கூறுகையில், திருநங்கைகள் கல்வி பெறுவது என்பது நாட்டின் வளர்ச்சியில் சிறப்பாக பங்காற்ற முடியும் என்று தெரிவித்தார்.

திருநங்கைகள் உறுப்பினர் குட்டி கின்னார் என்பவர் கூறுகையில், எங்களுக்கு இந்த பல்கலைக்கழகம் மிகுந்த பயன் அளிக்கக்கூடிய ஒன்றாகும். நாங்கள் கல்வி வசதியை பெறும் காரணத்தால், இந்த சமூகம் எங்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கும் என்பது உறுதி. கல்வி என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றாகும். இது எங்களின் வாழ்க்கையை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *