வாழ்வியல்

மரபுசாரா மின்சாரம் தயாரிப்பு:கொங்குநாடு கல்லூரி மாணவி சோபியா ஜென்னிபர் வெற்றிகரமான ஆராய்ச்சி

ஓடும் வாகன சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என கொங்குநாடு கல்லூரி மாணவி சோபியா ஜென்னிபர் வெற்றிகரமான ஆராய்ச்சி செய்துள்ளார்.

தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னையே மின் பற்றாக்குறை தான். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தங்களால் ஆன புதிய முயற்சியை துவக்கியுள்ளனர்,

இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி சாலை போக்குவரத்தில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறார் சோபியா ஜென்னிபர் என்ற மாணவி. இவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஸ்பீடு பிரேக்கருக்கு பதிலாக காற்று செலுத்தப்பட்ட ரப்பர் குழாய்களை பதிக்க வேண்டும். இந்த “ஸ்பீடு பிரேக்கர்’ வழியாக வாகனங்கள் செல்லும்போது, டயர் அழுத்தம் காரணமாக, அதிக விசையுடன் காற்று உள்ளே செல்கிறது. ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும் காற்று, சாலையோரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள, “ஸ்டோரேஜ் டேங்க்’ல் சேமிக்கப்பட்டு, அருகில் உள்ள காற்றாலையை இயங்க வைக்கிறது. இங்கு இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

தமிழக சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு சிறிது நேரம் கூட ஓய்வில்லாத நிலையில், இந்த தொழில்நுட்பத்தால் மின்சாரம் தயாரிப்பது, பெருமளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *