செய்திகள்

தேர்தலில் வாக்களிக்க ஏதுவான அடையாள ஆவணங்கள் என்னென்ன?

சென்னை, மார்ச் 6–

வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 12 அடையாள ஆவணங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

வாக்காளர் விவரச் சீட்டு, வாக்களிக்கும் ஆவணமில்லை. வாக்காளர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு வழங்கப்படவுள்ள சீட்டினை வாக்களிக்கும் ஆவணமாகப் பயன்படுத்த முடியாது.

வாக்காளர் விவரச் சீட்டில் வாக்குசாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரம் இடம் பெற்றிருக்கும். இதில் புகைப்படம் இடம் பெறாது. தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னே அனைவருக்கும் வாக்காளர் விவரச் சீட்டு வழங்கப்படும்.

வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள்?

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 11 அடையாள ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.

தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியுள்ள ஆவணங்கள் விவரம்:-

1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை

2. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)

3. ஓட்டுநர் உரிமம்

4. ஆதார் அட்டை

5. மத்திய, மாநில அரசு ஊழியர் என்றால் அந்த அடையாள அட்டை

6. புகைப்படத்துடன்கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்

7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு)

8. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டது)

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

10. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்ச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

11. ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

12. அலுவலக அடையாள அட்டை (நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *