செய்திகள்

ரூ.1000 நிவாரண நிதி வீடு வீடாக வழங்கும் பணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை

19–தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அறிவித்தப்படி

ரூ.1000 நிவாரண நிதி வீடு வீடாக வழங்கும் பணி 

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை

 

சென்னை, ஜூன் 17–

19– தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அறிவித்தப்படி ரூ.1000 நிவாரண நிதியை வீடு வீடாக வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.

சென்னையை பொறுத்தவரை கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு சென்னையில் உள்ள 120 தடுப்பு பணி குழுக்கள் உருவாக்கப்பட்டு, 19 அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சை பிரிவு 300 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் சிகிச்சை பிரிவு ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என வரும் காலங்களில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.

அப்படி நோய் தொற்று இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதிப்பது போன்ற பணிகளை வரும் காலங்களில் தீவிரப்படுத்தி நோய் தொற்றை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வரும் 19-ம் தேதி முதல் ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ரூ.1000 நிவாரண நிதியை முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணநிதியை 12 நாட்களுக்கு வீடு வீடாக கொண்டு சேர்க்கும் பணியை வருவாய் துறையினர் எப்படி மேற்கொள்வது. மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மக்கள் அதிகம் கூடாமல், சமூக இடைவெளியுடன் இந்த பணத்தை மக்களுக்கு எப்படி வழங்குவதுஎன வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து செயல்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி 19-ம் தேதி முதல் 12 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நாட்களில் செக்போஸ்ட் அமைத்து காவல்துறையினர் பணிபுரியும் போது, அவர்களுடன் வருவாய் துறையினரும் இணைந்து எப்படி பணியாற்றுவது என வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கொள்ள வேண்டும். இந்த இக்கட்டண காலகட்டத்தில் வகுக்கப்படும் திட்டங்களை கடைகோடி ஊழியர்களிடம் கொண்டு சேர்த்து, அந்த ஊழியர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இந்த காலகட்டத்தில் கடினமான பணியை மிகப்பெரிய சிரமம் ஆகும். அப்படி கொண்டு சேர்த்தால் நான் நாம் வெற்றி பெற முடியும்.

அதே போன்று மண்டலம் தோறும் கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் தீவிரமாக வரும் 12 நாட்களில் ஈடுபட்டு நோயை குறைக்கும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அந்த பணியை விரைந்து முடித்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் அரசுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *