சினிமா

‘பட்டாஸ்’சை அடுத்து மீண்டும் சத்யஜோதி தயாரிப்பில் தனுஷ்!

Spread the love

சென்னை, பிப்.4–

தனுஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் “தனுஷ் 43”.

டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் தியாகராஜன். இந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும் கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் என்றார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது.

பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன மற்றும் அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு ஜீ.வி. பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார். கதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .வரும் அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *