செய்திகள்

புரட்டாசி மாதம் நிறைவு: இறைச்சி, மீன் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

சென்னை, அக். 18

புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதையடுத்து சென்னையில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது.

புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் அதிகாலை குவிந்த மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு விருப்பமான இறைச்சி மற்றும் மீன்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் சற்று அதிகரித்தே காணப்பட்டது. இதன் காரணமாக இறைச்சி, மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.

இதேபோன்று, காஞ்சீபுரம் புதிய ெரயில் நிலையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் அதிகளவில் குவிந்த மக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றித் திரிந்ததால், அங்கு தொற்று பரவும் அபாய நிலை உருவாகியது. மேலும் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *