செய்திகள்

நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டி

Spread the love

சென்னை, செப்.21–

நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

நாங்குனேரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற வசந்தகுமார் இப்போது கன்னியாகுமரி பார்லிமெண்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால் அந்த கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் இன்று காங்கிரஸ் தலைவர் அழகிரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு இதனை ஸ்டாலின் அறிவித்தார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *