வாழ்வியல்

பார்வையற்ற மாணவிகளின் விழிகளாகத் திகழும் கல்லூரி!

Spread the love

பாளையங்கோட்டையில் பார்வையற்ற மாணவிகளுக்கென தனிப்பள்ளி இருந்தாலும் உயர் கல்விக்கு தனியாக சிறப்புக் கல்லூரி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் உள்ளது, ராணி அண்ணா மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில், இளநிலை முதுநிலையில் 25 பார்வையற்ற மாணவிகள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற மாணவிகளின் உயர்கல்விக்கான அட்சய பாத்திரமாகவும் உள்ளது இந்தக்கல்லூரி.

கல்லூரியின் வரலாறு

1970 ஆம் ஆண்டு காந்தி நகர் விநாயகர் கோவில் அருகே, கூரை வேய்ந்த கட்டத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட்டது. இந்தக்கல்லூரி அபஷேகப்பட்டி அரசு கால்நடைப் பண்ணையிடம் இருந்து பெற்ற 40 ஏக்கர் நிலத்தில் பல்வேறு கட்டங்களுடன் இப்போது பரந்து விரிந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் மனைவி பெயரால் ராணி அண்ணாதுரை மகளிர் கலைக்கல்லூரி என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் 69 மாணவிகளுடன் இயங்கிய கல்லூரி, இப்போது ஆண்டுக்கு 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

பாடப்பிரிவுகள்

1972, 1974, 1979 ,1980 ,1983 ,1993, 1999 ஆகிய கல்வி ஆண்டுகளில் இளநிலை முதுநிலையில் பல்வேறு பாடங்கள் அறிமுகப்டுத்தப்பட்டன. இப்போது பி.ஏ பி.எஸ்ஸி. எம்.ஏ எம், எஸ்ஸி பட்டங்களில் தமிழ் , ஆங்கிலம், கணிதம், வணிகவியல், வரலாறு பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், எம்.ஏ மனிதவள மேம்பாடு, எம்.பில் தமிழ், எம்.பில் மனிதவளமேம்பாடு ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன.

இவை தவிர, கடந்தாண்டு முதல் பி.எஸ்ஸி ஜியாலஜி, பி.ஏ இதழியல்–மக்கள் தொடர்பியல், பி.ஏ. சமுகவியல், எம்.ஏ வணிகவியல், எம்.பில் கணினி அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடங்கள் அறிமுகமாகியுள்ளது.

சேர்க்கை விவரம்

அரசு வழிகாட்டுதலுடன் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையிலேயே அனைத்து இடங்களும் நிரப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்துக்கும் பிசி, ஓசி, பிசிஎம், எஸ்சி, எஸ்டி, எம்பிசி ஆகிய பிரிவுகளுக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வி உதவித்தொகை

இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் பயிலும் மாணவிகளுக்கு, அவரவர் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகை, பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *