செய்திகள்

வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளம்: எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்

திருப்பத்தூர், பிப்.11–

வேலூர் மாநகரில் வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாநகரில் வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளம் திறப்பு நிகழ்ச்சி வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன், முன்னாள் எம்.பி. ஏ.சி.சண்முகம், வேலூர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ரித்தீஷ், அக்ரி கே.பாலாஜி, வழக்கறிஞர் பாலச்சந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் கே.முல்லைவேந்தன், வி.எல்.ராஜன், எல்.டி.ஹமந்த்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *