செய்திகள்

சென்ட்ரல் வங்கியின் மத்திய கடன் கிளை: எழும்பூரில் எஸ்.கே.பட்டாச்சார்யா திறந்தார்

Spread the love

சென்னை, ஜன. 16–

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின், மத்திய கடன் பரிசீலனை, அனுமதி கிளையை சென்னை பிராந்திய அலுவலகத்தில் பீல்டு பொதுமேலாளர் எஸ்.கே.பட்டாச்சார்யா திறந்து வைத்தார்.

இந்த கிளையில் வீடு, அடமான கடன்கள், கல்வி கடன், வீடு வாடகை பேரில் கடன் போன்ற கடன்களை பரிசீலனை செய்து கடன் அனுமதி செய்யப்படும் என்று எஸ்.கே.பட்டச்சார்யா தெரிவித்தார்.

சென்னை நகரில் உள்ள 35 கிளை வாடிக்கையாளர்களுக்கு தேவையான கடன்கள் இந்த மத்திய கடன் பிராசஸ் கிளையில் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் என்று எஸ்.கே.பட்டாச்சார்யா தெரிவித்தார்.

வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த ரக சில்லறை கடன்களாக இருந்தாலும், இந்த கிளையில் உடனடி கடன் வழங்கப்படும் என்றும் எஸ்.கே.பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இந்த சென்னை மத்திய கடன் கிளை எழும்பூரில் உள்ள இந்த வங்கியன் ரீஜினல் அலுவலகம் மாண்டியத் ரோடு, எண் 48, 49ல் வளாகத்தில் செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *