வர்த்தகம்

தமிழக அரசின் பெட்ரோல், கியாஸ் சிக்கன நடவடிக்கைக்கு மத்திய அரசின் சிறப்பு விருது

இந்தியன் ஆயில் செயல் இயக்குனர் ஜெயதேவன் தகவல்

சென்னை, ஜன. 20–

2020ஆம்‌ ஆண்டில்‌, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள்‌ மேற்கொண்ட ஆயில்‌ மற்றும்‌ ‘கியாஸ்‌’ சிக்கனம் குறித்த பல்வேறு நடவடிக்கைளுக்கு மகத்தான வகையில்‌ ஆதரவும்‌ ஒத்துழைப்பும்‌ நல்கியதற்காக, தமிழ்நாடு மாநிலத்திற்கு அகில இந்திய அளவிலான தனிச்சிறப்பு மிக்க செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது என்று இந்தியன் ஆயில் செயல் இயக்குனர் ஜெயதேவன் தெரிவித்தார்.

கூடுதலாக, 2020ஆம்‌ ஆண்டில்‌, பெட்ரோலிய தொழில்‌ துறையில்‌ அதிகபட்ச அளவில்‌ சேமிப்பு நிகழ்வுகளை மேற்கொண்டதற்காகவும்‌ தமிழ்நாட்டின்‌ மாநில அளவிலான பெட்ரோலிய துறை ஒருங்கிணைப்பாளர் இந்தியன் ஆயிலுக்கும் அகில இந்திய அளவிலான தனிச்சிறப்பு மிக்க செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது.

சக்ஷம்‌ என்கிற ஆயில்‌ மற்றும்‌ ‘கியாஸ்‌’ சேமிப்பு மாதம்‌ 2021 தொடக்க விழாவில்‌ இன்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு விருதுகளை புதுடெல்லியில்‌ பெட்ரோலியம்‌ மற்றும்‌ இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்‌ செயலர்‌ தருண்‌ கபூர்‌ வழங்கினார்‌. அதனை ஆன்லைன்‌ வாயிலாக, தமிழ்நாடு ஈவில்‌ சப்ளைஸ்‌ – நுகர்வோர்‌ பாதுகாப்பு ஆணையர்‌ சஜ்ஜன்சிங்‌ ஆர்‌. சவான்‌ தமிழ்நாட்டின்‌ பெட்ரோலிய துறைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்‌ இந்தியன்‌ ஆயில்‌, தமிழ்நாடு- செயல்‌ இயக்குநர்‌ ஜெயதேவன்‌ ஆகியோர் பெற்றுக்‌ கொண்டனர்‌. சாக்ஷம்‌ நிகழ்ச்சி என்பது பெட்ரோலியம்‌ மற்றும்‌ இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்‌ வழிகாட்டுதலின்‌படி, பிசிஆர்ஏ எனப்படும்‌ பெட்ரோலியம்‌ பாதுகாப்பு மற்றும்‌ ஆராய்ச்சி அமைப்பால்‌ ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

தொடக்க நிகழ்ச்சியில்‌, தமிழக அரசின்‌ தொழில்‌ துறை முதன்மை செயலர்‌ என்‌. முருகானந்தம்‌ பேசுகையில், -அனைத்து வகை எரிபொருள்‌ ஆற்றல்களில்‌ தமிழ்நாடூ எப்போதுமே தன்னிறைவு பெற்றுத்‌ திகழ்ந்து வருகிறதுஎன்பது குறிப்பிடத்‌தக்கது. குறிப்பிட்ட வடிவிலான மின்சார வாகனக்‌ கொள்கையை தமிழ்நாடு தான்‌ முதன்முதலில்‌ வெளியிட்டது என்றும்‌ நவீன ஆலை மற்றும்‌ வர்த்தக கட்டமைப்புடன்‌ கூடியதாக கம்ப்ரெஸ்டு பயோ-கேசுக்கான ஆலையும்‌ இங்குதான்‌ முதன்முதலில்‌ அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்‌ .

மேலும்‌, சென்னையில்‌ எண்ணூர்‌ இயற்கை எரிவாயு மையம் மூலம் இறக்குமதியில்‌ மும்முரமாக ஈடுபட்டு வருவதுடன்‌ தமிழகத்தில்‌ இதற்காக பைப்‌ லைன்‌ பதித்தல்‌ பணியிலும்‌ முழுமூச்சாக இறங்கி உள்ளது என்றார்.

ஜெயதேவன்‌ பேசுகையில், -பெட்ரோலியம்‌ பொருட்கள்‌ தயாரிப்புகளை இளைய தலைமுறையின்‌ பிரதிநிதிகளான மாணவ மாணவிகள்‌ பேணிப்‌ பாதுகாப்பதை சாக்ஷம்‌ மீண்டும்‌ வலியுறுத்துகிறது எனலாம்‌. மாநிலமெங்கும்‌ தங்கள்‌ ஆசிரியர்களின்‌ வழிகாட்டதுலுக்கு இணங்க, மாணவர்கள்‌ உற்சாகத்துடன்‌ எங்களது நிகழ்ச்சிகளில்‌, போட்டிகளில்‌ பங்கேற்றது தமிழ்நாட்டில்‌ மேற்கொள்ளப்பட்ட சேமிப்பு நடவடிக்கைகளுக் கான வெற்றியின்‌ முக்கிய காரணி என்றால்‌ மிகை ஆகாது என்றார்‌.

தமிழகத்தில்‌ பொதுத்துறை எண்ணெய்‌ நிறுவனங்களால்‌ 20 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட பரப்புரை நிகழ்வுகள்‌, பயிலரங்குகள்‌, போட்டிகள்‌, பேரணிகள்‌, கருத்தரங்குகள்‌, நடை பயணங்கள்‌ ஆகியவை மக்கள்‌ வசிப்பிடங்கள்‌, தொழில்துறை இடங்கள்‌, போக்குவரத்து பகுதிகள்‌, விவசாயம்‌ சார்ந்த பகுதிகள்‌ ஆகிய பகுதிகளில்‌ பெட்ரோலியம்‌ பொருட்களைப்‌ பேணி பாதுகாத்து சிக்கனமாகப்‌ பயன்படுத்துவதை வலியுறுத்தும்‌ வகையில்‌ நடத்தப்பட்டன. மக்களுக்கும்‌ பார்வையாளர்‌களுக்கும்‌ எரிபொருளைப்‌ பேணிப்‌ பாதுகாத்தல்‌ வழிமுறைகளும்‌ சிக்கனமாகப்‌ பயன்படுத்தும்‌ வழிமுறைகளும்‌ விரிவாக எளிதில்‌ விளங்கும்‌ வகையில்‌ எடுத்துரைக்கப்பட்டன. சக்ஷம்‌-2021 என்பது ஜனவரி 16ந் தேதியிலிருந்து பிப்ரவரி மாதம் 15ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில்‌, தமிழ்நாட்டில்‌ ஆயில்‌ மற்றும்‌ கியாஸ் சேமிப்பு சிக்கனமாகப்‌ பயன்படுத்துதல்‌ குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *