சிறுகதை

வறுமையிலும் மனம் கலங்காதே

சிறுகதை துரை. சக்திவேல் தம்பி நல்லா இருக்கீங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு… லீவுக்கு அம்மா, அப்பாவை பார்க்க வந்தீங்களா… என்று பெட்டிக்கடையில் இருந்த மாணிக்கத்திடம் நலம் விசாரித்தார் விவசாயி கருப்பன். ஐயா… நல்லா இருக்கேன்… நேத்து தான் வந்தேன்… என்று பதில் சொன்னான் மாணிக்கம். அப்பா இல்லையா தம்பி என்று மாணிக்கத்திடம் கேட்டார் கருப்பன். அப்பா பட்டணத்துக்கு அக்காவை பார்க்க போயிருக்காரு… பொழுது சாய்ரதுக்கு முன்னாடி வந்துடுவேன்னு சொன்னாரு என்று மாணிக்கம் பதில் கூறினான். தெரியும் தம்பி… […]

சிறுகதை

ராஜேந்திரன் வீட்டு எலி!

ராஜேந்திரனுக்கு பிரச்சனை முதலில் சிறியதாகத்தான் ஆரம்பித்தது. போகப்போக தான் அது பெரியதாகியது! ராஜேந்திரன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றாலும் அதே கம்பீரம். ஆனால் ராணுவ வீரர்கள் என்றாலே முகத்தில் ஒரு கடுமை இருக்குமே, அதை ராஜேந்திரன் முகத்தில் கொஞ்சமும் பார்க்க முடியாது. எப்போதும் சிரித்த முகம்! ராணுவ வீரர்களுக்கே உரிய அதிக நாட்டுப்பற்று இவரிடமும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது. அதைவிட ஆச்சரியமான விஷயம் அவரிடமிருந்த அதிக இரக்கக் குணம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ‘அப்பாடா’ […]

சிறுகதை

வறுமையிலும் மனம் கலங்காதே

சிறுகதை துரை. சக்திவேல் தம்பி நல்லா இருக்கீங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு… லீவுக்கு அம்மா, அப்பாவை பார்க்க வந்தீங்களா… என்று பெட்டிக்கடையில் இருந்த மாணிக்கத்திடம் நலம் விசாரித்தார் விவசாயி கருப்பன். ஐயா… நல்லா இருக்கேன்… நேத்து தான் வந்தேன்… என்று பதில் சொன்னான் மாணிக்கம். அப்பா இல்லையா தம்பி என்று மாணிக்கத்திடம் கேட்டார் கருப்பன். அப்பா பட்டணத்துக்கு அக்காவை பார்க்க போயிருக்காரு… பொழுது சாய்ரதுக்கு முன்னாடி வந்துடுவேன்னு சொன்னாரு என்று மாணிக்கம் பதில் கூறினான். தெரியும் தம்பி… […]

சிறுகதை

காதல் திருமணம்

பாக்கியலட்சுமிக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. உஷ்உஷ் என இளைத்துக் கொண்டே இருந்தாள். அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்திருந்த நிர்மலாவுக்கும் நிதானம் தப்பிப் போய் தான் இருந்தது. பாக்கியலட்சுமியின் அழுகையை நிறுத்தப்போன நிர்மலாவுக்கும் அழுகை சேர்ந்தே வந்தது. ‘ஏய்… பாக்கியம் அழுகைய நிறுத்துடி. ஏய் பாக்கியம்’ என்று தேம்பும் குரலில் தேற்றிய நிர்மலாவும் தேம்பிக் கொண்டே இருந்தாள். அவள் சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகை மேலும் கூடியதேயொழிய குறைந்தபாடில்லை திமிறிக்கொண்டு தேம்பினாள். ‘ஏய், சின்னப்புள்ள மாதிரி, என்னடி, விடு… […]

சிறுகதை

எங்கே வாழ்க்கைப் பயணம்!

இடம் : சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் நேரம் : அதிகாலை 2 மணி ––––––––––– அமெரிக்காவிலிருந்து சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வர இருக்கும் அண்ணன் ஜனா என்ற ஜனார்த்தனனை வரவேற்க கிருஷ்ணன் அவனது மனைவி வான்மதி மற்றும் மகன் 13 வயது சங்கர் தயாராக இருந்தனர். 8ம் வகுப்பு ஒரு வழியாக முடிந்துவிட்ட மன சந்தோசத்துடன் கையில் ஒரு பூங்கொத்துடன் சங்கர் படு ஆர்வமாக பெரியப்பாவின் வருகைக்கு காத்திருந்தான். பெரியம்மாவும் தன் வயதையொட்டிய […]

சிறுகதை

நம்பிக்கைத் துரோகி

வாடா ராஜேஷ்…. என்ன ஆளையே பார்க்க முடியலை… உள்ளே வா என்று வீட்டுக்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் ஜெயகுமார். ஜெயக்குமாரும் ராஜேஷூம் நெருங்கிய நண்பர்கள். பள்ளி காலம் முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்த குடும்ப நண்பர்கள். சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த அவர்கள் திருமணம் முடிந்து வேலை காரணமாக வெவ்வேறு பகுதிகளில் குடியேறினர். ஜெயக்குமார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாக வீடு வாங்கி குடியேறினான். அவனை பார்ப்பதற்கு ராஜேஷ் வந்தான். ஏன்னடா…. நாங்க […]

சிறுகதை

மணல் வீடுகள்

“அம்மா….. நான் பெரியவனானா நிச்சயம், பெரிய…. வீடு கட்டணும். கார் வாங்கணும். பெரிய, பெரிய…. ஆசையெல்லாம் இருக்கு” என்ற அரவிந்தனின் எண்ண அலைகள், அவன் பழைய நாட்களை நினைவு படுத்தி அவனின் கண்ணில் ஈரம்… என்னதான் மனதில் கோடி கோடி ஆசைகள் இருந்தாலும் நிகழ்வில் “அரவிந்த், எங்கப்பா போனே? காய்கறி மார்கெட்டுக்கு போயிட்டு வாப்பா., காரை வேறு அலம்பணும் …. அரவிந்த்.” மிகவும் அதிகார தோரணையோடு அவன் முதலாளியின் மனைவி கூச்சலிட “அம்மா…” “என்னப்பா எங்க போனே? […]

சிறுகதை

சீட்டாட்டம்

‘அப்பா நீ என்ன சொன்னாலும் கேக்க மாட்டியா? சம்பாரிக்கிற எல்லாப் பணத்தையும் சீட்டாடியே விட்டுர்றயே. குடும்பத்துக்குன்னு என்ன சேத்து வச்சுருக்க. நீ சம்பாரிக்கிறீயா சீட்டாடி அவ்வளவையும் விட்டுர்ற. கேட்டா நான் தான சம்பாதிக்கிறேன்னு பெருசா பீத்திக்கிற, இது தப்புப்பா, சூதாட்டம் ஆகாது, குடும்பத்த கெடுத்துப்புடும்’ என்று அப்பா நாராயணனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தான் மகன் விஷ்ணு. ‘பெத்த புள்ள புத்தி சொல்லி பொழைக்க வேண்டியிருக்கு, எல்லாம் விதி, புலம்பினார் நாராயணன். ‘ஏங்க பண்றது தப்பு இது பொண்டாட்டி […]

சிறுகதை

மாற்றம்

சிங்காரவேலர் செயின் ஸ்மோக்கர். எப்போதும் சிகிரெட்டும் கையுமாகவே இருப்பார். அவர் அருகில் சென்றால் ஒரு விதமான நாத்தம் அடிக்கும். அலுவலகம் வரும் போது, எத்தனை சிகரெட்டுகளைக் குடிப்பார், எத்தனை தடவை புகையை நுரையீரலுக்குள் இழுப்பார் என்பது அவருக்கே கணக்குத் தெரியாது உள்ளுக்குள் இழுக்கும் புகையை சுவாசத்தோடு கலந்து புகுத்துவார். சிங்காரம் “ம்” நீங்க செய்றது சரியில்லீங்க. ஏன்? புகையும் வாயோடே எதிர்பதில் சொல்வார். “இப்படி சிகிரெட் குடிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும். கொஞ்சம் விட்டுத்தான் பாருங்களேன்’’ என்ன […]