போஸ்டர் செய்தி

இந்திய–சீன உறவில் புது அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்

மாமல்லபுரம்,அக்.12 பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசியதை தொடர்ந்து இருவர் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். மாமல்லபுரம் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் நடந்த உயர்மட்ட ஆலோசனையில், இந்திய தரப்பில் பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீன தரப்பில் அதிபர் […]

போஸ்டர் செய்தி

இரண்டாவது நாளாக மோடி–ஜி ஜின்பிங் சந்திப்பு

சென்னை,அக்.12– இன்று இரண்டாவது நாளாக பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கோவளத்தில் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்–இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இன்று காலை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து 9.40 மணி அளவில் புறப்பட்ட சீன அதிபர், கோவளத்தில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் […]

போஸ்டர் செய்தி

கோவளம் கடற்கரையில் குப்பை கூளங்களை அகற்றினார் மோடி

சென்னை,அக்.12– சீன அதிபருடனான சந்திப்புக்கு மத்தியில் இன்று காலை நடைபயற்சியின்போது கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் -–இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை இரண்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். சுற்றுலா பகுதிகளை பார்வையிட்ட அவர்கள், கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். இரவு விருந்திற்கு பிறகு மோடி கோவளத்தில் உள்ள […]

போஸ்டர் செய்தி

தேசத்தின் பேரழகான ஊர் மாமல்லபுரம்: டுவிட்டரில் மோடி தமிழில் பெருமிதம்

நாட்டின் பேரழகான இடமாகவும், உயிர்த்துடிப்பு மிக்க ஊராகவும் மாமல்லபுரம் விளங்குகிறது என்று பிரதமர் மோடி தமிழில் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். சென்னைக்கு நேற்று பிரதமர் மோடி வந்திறங்கியதில் இருந்து பல்வேறு பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவற்றில் சிலவற்றை தமிழிலும், சிலவற்றை சீன மொழியிலும் பதிவு செய்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகத்துக்கு வந்தது மகிழ்ச்சி என முதல் பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து மாமல்லபுரத்துக்குப் […]

போஸ்டர் செய்தி

மாமல்லபுரத்தில் கலை சிற்பங்களை ரசித்தார் சீன அதிபர்

சென்னை, அக். 12– மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் உற்சாகமாக வரவேற்றார். இரு தலைவர்களும் நடந்தே சென்று கலைச்சிற்பங்களை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். சீன அதிபருக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 தேதிகளில் சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அங்குள்ள […]

செய்திகள் போஸ்டர் செய்தி

சீன அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு

சென்னை,அக்.11– ‘ஏர் சைனா’ விமானம் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் 2.13 மணி அளவில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மேள தாளம் முழங்க தமிழக பாரம்பரிய முறைப்படி மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், பரஸ்பர நல்லுறவும், […]

செய்திகள் போஸ்டர் செய்தி

தமிழ், சீன மொழியில் பிரதமர் மோடி டுவீட்

சென்னை,அக்.11– தமிழகத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தமிழ் மற்றும் சீன மொழியில் டுவீட் செய்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை வருகை குறித்து பிரதமர் மோடி, தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில் […]

செய்திகள் போஸ்டர் செய்தி

சென்னை வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை,அக்.11– சீன அதிபரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் முறைசாரா உச்சிமாநாடு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி […]

செய்திகள் போஸ்டர் செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது

லாகூர், அக். 11– சர்க்கரை ஆலை முறைக்கேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். சவுத்ரி சர்க்கரை ஆலையின் பங்குகளை விற்றது மற்றும் வாங்கியதில் முறைக்கேடு நடந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் நவாஸ் ஷெரீப் நேரடி தொடர்பில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக லாகூர் போலீசார் நவாஸ் ஷெரீப்பை கைது செய்தனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை […]

செய்திகள் போஸ்டர் செய்தி

கார் – லாரி மோதல் – தாய், தந்தை, மருமகள் பலி

நாகப்பட்டிணம்,அக்.11– சீர்காழி புறவழிச்சாலையில் பால் ஏற்றிச் சென்ற லாரியும் காரும் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை சேர்ந்த சரவணன் வெளிநாடு சென்றார். அவரது மனைவி சுமித்ரா, தந்தை சோமசுந்தரம், தாய் சாந்தி மற்றும் உறவினர்களுடன் காரில் சென்று சரவணனை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். சீர்காழி புறவழிச்சாலையில் பால் ஏற்றிச் சென்ற லாரி இவர்கள் […]