செய்திகள்

ஜப்பான் விண்கலம் நிலவில் தரை இறங்கியது: வேகமாக சக்தியை இழந்து வரும் லேண்டர்

டோக்கியோ, ஜன. 20– நிலவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம், வேகமாக தனது சக்தியை இழந்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளை பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளே வெற்றியும் பெற்று இருக்கின்றன. இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. துல்லிய தரை இறக்கம் […]

Loading

செய்திகள்

பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது: காசா போர் குறித்து அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

டெல் அவிவ், ஜன. 20– காசா போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய காசா – இஸ்ரேல் மோதல், தற்போது வரை தொடர்ந்து வருகிறது. “காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]

Loading

செய்திகள்

பேராவூரணி அருகே இன்று காலை கார் விபத்து: 4 பேர் பலி; 7 பேர் காயம்

பேராவூரணி, ஜன. 20– பேராவூரணி அருகே சாலையோரம் இருந்த தடுப்பில் இன்று காலை கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மரியசெல்வராஜ் (வயது 37), இவரது மனைவி பத்மாமேரி (வயது 31), இவரது மகன் சந்தோஷ் செல்வம் (வயது 7)அதேப் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் (வயது 53), சரஸ்வதி (வயது 50), கணபதி (வயது 52), லதா(வயது 40), ராணி (வயது 40), […]

Loading

செய்திகள்

20 கிலோ பார்லேஜி பிஸ்கட்டில் இளைஞர் கட்டிய ராமர் கோயில்

கொல்கத்தா, ஜன. 19– 20 கிலோ பார்லேஜி பிஸ்கெட்டில் 4 அடி உயரத்தில் எழிலான ராமர் கோயிலை கட்டி அசத்தியுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டிருந்த 450 ஆண்டுகால பழமையான பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அதில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டவும், அதற்கு ஈடாக அருகில் பாபர் மசூதி கட்ட இடம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒரு […]

Loading

செய்திகள்

பிரதமர் வருகை: ராமேஸ்வரத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை

ராமேஸ்வரம், ஜன. 19– பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் பகுதிகளில் பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விளையாடு இந்தியா என்ற பெயரிலான இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து நாளை திருச்சி திருவரங்கம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் செல்ல உள்ளார். இதனையொட்டி இந்த மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், […]

Loading

செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு 22–ந்தேதி அரை நாள் விடுமுறை அறிவிப்பு

அயோத்தி, ஜன.19-– அயோத்தி ராமர் கோவில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகளுக்கு, அன்றைய தினம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 5.26 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜன.19-– ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்காக தமிழ்நாட்டுக்கு 5.26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு வலியுறுத்தி உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 92-வது கூட்டம் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் தங்களது அதிகாரிகளை அந்தந்த மாநிலங்களில் இருந்து ஆன்லைனில் பங்கேற்க வைத்தன. இது 92-வது கூட்டம் மட்டுமின்றி இந்த […]

Loading

செய்திகள்

சென்னை ஆதம்பாக்கம் அருகே பறக்கும் ரெயில் பாதை இடிந்து விபத்து

உயிரிழப்பு தவிர்ப்பு சென்னை, ஜன. 19–- சென்னையில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரெயில் பாதை கட்டுமானப் பணியின் போது திடீரென மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பாலம் விழுந்தபோது, அந்த இடத்தில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் போக்குவரத்து இருக்கிறது. தற்போது, எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது பாதைப் பணி காரணமாக, சிந்தாரிப்பேட்டை – வேளச்சேரி இடையே […]

Loading

செய்திகள்

ஆந்திர காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளாவின் வீட்டில் முதலமைச்சர் ஜெகன் மோகன்

ஐதராபாத், ஜன. 19– ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளா வீட்டு நிகழ்ச்சியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.கட்சி தலைவரும், ஷர்மிளாவின் அண்ணனும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச அரசியல் களத்தில் ஒரு காலத்தில் தமையனுக்குப் பக்க பலமாக இருந்த தங்கையே தற்போது, நேரெதிராகக் களமிறங்கியிருக்கிறார். முதலில், தெலங்கானாவில் தனிக் கட்சித் தொடங்கிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, நடந்த முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 355 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 6 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.19– இந்தியாவில் புதிதாக 355 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2331 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 305 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading