செய்திகள்

சதி செயல் புகார்: 13 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை செய்த தேசிய புலனாய்வு முகமை

மும்பை, டிச. 10– பயங்கரவாத சதி செயல் புகாரில் 13 பேரை தேசிய புலனாய்வு முகமை மகாராஷ்டிராவில் கைது செய்துள்ளது. நாடெங்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட மத அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா அமைப்புகளின் சித்தாந்தத்தை அடியொற்றி செயல்பட்டு வருவதாகவும் வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 13 பேர் கைது இதன் ஒரு பகுதியாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, டிச. 10– இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 895 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 148 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,03,055 […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ம் சட்டப்பிரிவு ரத்து வழக்கு:உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி, டிச. 10– ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டை குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவும் இந்தியா–காஷ்மீர் அரசுக்குகளுக்கு இடையில் […]

Loading

செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்: இன்று ஒரேநாளில் 70,000 முன்பதிவுகள்

திருவனந்தபுரம், டிச. 10– சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இன்று மட்டும் 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மண்டல, மகர விளக்கு பூஜைகளை தொடர்ந்து, கோயிலில் தினந்தோறும் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். […]

Loading

செய்திகள்

இந்தியா–ரஷ்யாவின் நிலையான உறவுக்கு மோடியின் முடிவுகளே காரணம்:புதின் புகழாரம்

மாஸ்கோ, டிச. 10– கடுமையான அழுத்தங்களுக்கு இடையிலும் இந்திய தேசத்தின் நலனைப் பாதுகாக்க துணிச்சலான முடிவுகளை பிரதமர் மோடி எடுப்பதால் மட்டுமே இந்திய-ரஷ்ய உறவுகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார். ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ‘ரஷ்யா அழைக்கிறது’ என்ற மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பேசியதாவது:– இந்திய மக்கள் மற்றும் தேச நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ மற்றவர்களால் இயலாது. […]

Loading

செய்திகள்

சமூக ஊடக வளர்ச்சியால் வெறுப்புணர்வு அதிகரிப்பு : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி, டிச. 10– சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மை குறைந்து, உலகம் முழுவதும் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இன்றைய காலத்தில், ஃபேஸ்புல், வாட்ஸ் ஆப், ஸ்னேப் ஷாட், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் உள்ளன. உலகில் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் மூழ்கியுள்ளனர். சிலர் அதில் வெறுப்புணர்வுணர்வை தூண்டும் […]

Loading

செய்திகள்

சமூகநீதியை நிலைநாட்ட திமுக அரசு பயப்படுகிறது: அன்புமணி ராமதாஸ் தாக்கு

சென்னை, டிச. 10– தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான் என, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது கூறியதாவது:– “சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசிற்கு அனைத்து உரிமைகளும், சட்டங்களும் இருக்கிறது என பிரபல சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது’ […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் டிசம்பர் 15 ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை, டிச. 10– தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் டிசம்பர் 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 ந்தேதி வரை மழை இது குறித்து வானிலை […]

Loading

செய்திகள்

தொடர் கன மழையால் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு

30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு மேட்டுப்பாளையம், டிச. 10– குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன. குன்னூர் பகுதியில் கடந்த சில […]

Loading

செய்திகள்

ரெயில் விபத்துகளை தடுக்க 1,465 கி.மீ. பாதைகள், 139 ரெயில் என்ஜின்களில் ‘கவச்’ கருவி

ரெயில்வே துறை தகவல் புதுடெல்லி, டிச. 10– ரெயில் விபத்தை தடுக்க, இதுவரை நாடு முழுவதும் 1,465 கி.மீ. ரெயில் பாதைகள் மற்றும் 139 ரெயில் என்ஜின்களில் ‘கவச்’ கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. நாட்டில் ரெயில்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க தானியங்கி ரெயில் பாதுகாப்பு (கவச்) தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முறையாக பயணிகள் ரெயிலில் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதற்கு […]

Loading