செய்திகள்

வன கிராம குடும்பங்களுக்கு பலசரக்கு, காய்கறிகள் வழங்கல்

திருநெல்வேலி, ஏப். 5– திருநெல்வேலி அருகே உள்ள வன கிராம குடும்பங்களுக்கு பலசரக்கு, காய்கறிகளை வனத்துறை அதிகாரிகள் வழங்கினார்கள். அகில இந்திய அளவில் கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் –களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கள இயக்குநர் உத்தரவின் படியும், துணை இயக்குநர், அம்பாசமுத்திரம் வழிகாட்டுதலின் படியும், பாபநாசம் வனச்சரகம் மற்றும் முண்டந்துறை வனச்சரக குடியேற்ற பகுதியான அகஸ்தியர்நகர் காணிக்குடியிருப்பு, மைலார் காணிக்குடியிருப்பு, இஞ்சிகுழி காணிகுடியிருப்பு மற்றும் சேர்வலார் காணிக்குடியிருப்பு ஆகிய […]

செய்திகள்

ரூ.100 க்கு 10 வகை காய்கறிகள் வழங்கும் திட்டம் : அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் ரூ.100 க்கு 10 வகை காய்கறிகள் வழங்கும் திட்டம் : அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார் சிவகங்கை, ஏப்.5– ரூ.100 க்கு 10 வகை காய்கறிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டம் துவக்க விழா மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் கிராமப்பதிகளுக்கு பண்ணை பசுமை நடமாடும் காய்கறிகள் விற்பனை செய்யும் வாகன துவக்க விழா […]

செய்திகள்

கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றும் 200 தொழிலாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி அடங்கிய தொகுப்பு பைகள்

தளவாய் சுந்தரம் வழங்க ஏற்பாடு கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றும் 200 தொழிலாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி அடங்கிய தொகுப்பு பைகள் அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வழங்கினார் கன்னியாகுமரி, ஏப்.5– அண்ணா தொழிற்சங்கம் சார்பில், கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றும் 200 தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி உள்ளடக்கிய தொகுப்பு பைகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் வழங்க ஏற்பாடு செய்தார். இதனை குமரி கிழக்கு மாவட்ட […]

செய்திகள் போஸ்டர் செய்தி

கொரோனா வார்டில் தொலைக்காட்சி வசதி; 5 வேளையும் சத்தான உணவு

சென்னையில் 17 இடங்களில் பரிசோதனை கொரோனா வார்டில் தொலைக்காட்சி வசதி; 5 வேளையும் சத்தான உணவு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி சென்னை, ஏப்.5- தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்கள் நலன் கருதி தொலைக்காட்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் […]

செய்திகள்

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 22 இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

சென்னை, ஏப். 5– சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 22 இடங்களில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள எண்ணூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை, பெரம்பூர், அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், போரூர், ஆலந்தூர், கோட்டூர்புரம், திருவான்மியூர், மடிப்பாக்கம், பனையூர் ஆகிய 22 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் போலீசாரின் காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்குச் […]

செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு தமிழகம் முழுவதும் 135 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்

கொரோனா பாதிப்புக்கு தமிழகம் முழுவதும் 135 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் தமிழக அரசு அரசாணை வெளியீடு   சென்னை, ஏப்.5- தமிழகம் முழுவதும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் 135 தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வார்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் […]

செய்திகள்

ஆரணி தொகுதியில் இருளர், பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்

ஆரணி தொகுதியில் இருளர், பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார் ஆரணி, ஏப். 5– ஆரணி தொகுதியில் இருளர், பழங்குடியின மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார் ஆரணி தொகுதிக்கு உட்பட்ட 486 இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின குடும்பங்களுக்கு விலையில்லாமல் 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய்,10 வகையான காய்கறிகள், பாதுகாப்பு உபகரணங்கள், அடங்கிய அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பை அமைச்சர் சேவூர் எஸ். […]

செய்திகள்

பள்ளத்தூர் பேரூராட்சியில் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் தீவிரம்

சிவகங்கை, ஏப்.5– சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சியில் தமிழக அரசின் ஆணைப்படியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆகியோர் உத்தரவுப்படியும் கொரோனா நோய் தடுப்புப்பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன. பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினிகள், பவர் ஸ்பிரேயர் மூலமாகவும் கை ஸ்பிரேயர் மூலமாகவும் தெளிக்கப்பட்டும் அனைத்து வீதிகளிலும் சுண்ணாம்பு நீர் தெளித்தும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 144 தடை அமலில் உள்ள நிலையை, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவோர் தவிர, […]

செய்திகள்

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை துவக்கம்

அலங்காநல்லூர், ஏப். 5– மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மலிவு விலையில் காய்கறிகள் வழங்கும் திட்டத்தை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் தனபால், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு தலைவர் பாலாஜி, வரித்தண்டலர் கண்ணன், இளநிலை உதவியாளர் தனலட்சுமி, மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ மாணிக்கம் வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை […]

செய்திகள்

தேனி மாவட்டத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ சமுதாய தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை

தேனி மாவட்டத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ சமுதாய தலைவர்களுடன் கலெக்டர் பல்லவி ஆலோசனை தேனி, ஏப்.5– கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ சமுதாய தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் சமுதாய தலைவர்கள் தங்களது மக்களிடம் சமூக […]