செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்: தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

திருச்சி, ஏப். 27– விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து, தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Loading

செய்திகள்

திருப்பதி உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை

திருப்பதி, ஏப். 27– திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.3.20 கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 2 ஆயிரம் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாதிகள் வன்முறை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் பலி

இம்பால், ஏப்.27– மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக்குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2–-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-–வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேர்தல் ஆணையத்தின் செயலியில், […]

Loading

செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை சென்னை, ஏப்.27- வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு எந்திரங்களும், 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறையில் அவை 3 […]

Loading

செய்திகள்

‘மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது’: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஏப்.27- பள்ளிகளில், குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது:-– பள்ளி மாணவர்கள் அதிகளவிலான உடல் ரீதியிலான தண்டனைகளை அனுபவிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகள், விடுதிகள், குடும்பங்களுக்குள்ளும் இதுபோன்ற தண்டனைகளை மாணவர்கள் சந்திக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாத […]

Loading

செய்திகள்

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஏப்.27-– தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. பெட்டியில் 3 பேர் கட்டுக்கட்டாக பணம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க கடற்படை நமக்கு அருகாமையில் இலங்கையில் நடமாட்டம்

ஆர்.முத்துக்குமார் இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரம் அமெரிக்க கடற்படை குழுவொன்றும் திருகோணமலைக்குச் சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த சந்தர்பத்தில் ஈரானிய ஜனாதிபதி ரைசி தனது கொழும்பு விஜயத்தின் போது அதிகாரப்பூர்வமாக மத்திய மலைப் பிரதேசத்தில் ஈரானிய ஒப்பந்தக்காரர்களால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு அணைகள் மற்றும் 120 […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? : பகுதி 4-‘பிளாக்செயின்’ என்னும் அடுத்த பாய்ச்சல்

– : மா .செழியன் :– பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்படாத, பரவலாக்கப்பட்ட தகவல், தரவு தொடர் பதிவேடு தொழில்நுட்பம் ஆகும். இதன்படி எந்த தனியார் முதலாளியிடமும் பன்னாட்டு நிறுவனத்திடமும் தனியாக தகவல், தரவுகள் கொண்ட டிஜிட்டல் பதிவேடு எனும் சர்வர் இருக்காது. அது உலகம் முழுக்க இருக்கும். யார் யாரிடம் எந்தெந்த நாட்டில் தொடர் பிளாக்குகள் கொண்ட சர்வர்கள் இருக்கிறது என்பதே தெரியாது. அந்த தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள், […]

Loading

செய்திகள்

தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி பெங்களூரு, ஏப். 26– ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு […]

Loading

செய்திகள்

வக்கீல்களுக்கு வழக்கு பட்டியலை ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பும் திட்டம்

சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு புதுடெல்லி, ஏப்.26-– வக்கீல்களுக்கு வழக்கு பட்டியல் உள்ளிட்ட தகவல்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்ப போவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று ஒரு வழக்கு பற்றிய விசாரணையை தொடங்கியது. அப்போது, தலைமை நீதிபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-– கோர்ட் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் எடுத்து வருகிறது. இ-–கோர்ட் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7 […]

Loading