செய்திகள்

ஆன்லைன் விசாரணையின்போது சட்டை அணியாத வழக்கறிஞர்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லி, டிச.2–- ஆன்லைன் விசாரணையின் போது சட்டை அணியாமல் தோன்றிய வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடர்பான வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் எல்.என். ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதற்கான கேமராவை வழக்கறிஞர் ஒருவர், மேல் சட்டையின்றி சரி செய்து கொண்டிருந்தார், இதை பார்த்த நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொறுப்பற்ற […]

செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு: ஜனவரி 13–ந் தேதி நடைபெறும்

டெல்லி, டிச.2–- 2ஜி வழக்கில் விடுதலையான அ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிரான, மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜனவரி மாதம் நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் குற்றங்களை நிரூபிக்க எந்தவித ஆதாரத்தையும் சி.பி.ஐ. உள்ளிட்ட, குற்றம் சாட்டிய யாரும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி, தனிநீதிமன்ற நீதிபதி ஷைனியால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் […]

செய்திகள்

மத்திய அரசின் அறிவிப்புகள் தமிழிலும் இருக்க வேண்டும்

மதுரை, டிச.2–- சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல எல்லை தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்த ஐகோர்ட் கிளை, மத்திய அரசின் அறிவிப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. குமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த சதீஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘குமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல எல்லையை 0-3 கி.மீ தூரம் என நிர்ணயம் செய்வது தொடர்பாகவே கருத்து […]

செய்திகள்

பா.ஜ.க. தலைவர் பிறந்த நாள்: ஓ.பி.எஸ். வாழ்த்து

சென்னை, டிச.2– பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெபி.நட்டாஜிக்கு இனிய மற்றும் வளமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். சர்வவல்லவரின் ஆசீர்வாதங்களுடன் மக்களுக்கு அவர் செய்த மகத்தான சேவை தொடரட்டும். என்று டுவிட்டரில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

செய்திகள்

அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது வழக்குப்பதிவு சென்னை, டிச. 2– சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று பாமகவினர் 20 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2,700 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருங்களத்துாரில் ரயில் மற்றும் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டதால் […]

செய்திகள்

‘‘நிவர்” புயலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் ‘‘நிவர்” புயலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி உத்தரவு சென்னை, டிச.2– ‘‘நிவர்” புயலின் போது பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘நிவர்” புயல் காரணமாக, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், […]

செய்திகள்

மத்திய குழுவினர் தமிழகம் வருகை தள்ளி வைப்பு

‘நிவர்’ புயல், மழை சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் தமிழகம் வருகை தள்ளி வைப்பு சென்னை, டிச.2-– ‘நிவர்’ புயல், மழை சேதங்களை கணக்கிட தமிழகத்திற்கு வரவுள்ள மத்திய குழுவின் வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ‘நிவர்’ புயல் வீசியது. அப்போது காற்று பலமாக வீசியதோடு கனமழையும் பெய்தது. இதனால் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சரிந்தன. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின. பல கால்நடைகள் […]

செய்திகள்

4-ந் தேதி முதல் பி.எட். விண்ணப்பங்கள் வினியோகம்: அமைச்சர் அன்பழகன் தகவல்

சென்னை, டிச.2-– நாளை மறுநாள் (4-–ந் தேதி) முதல் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருப்பதாவது:– அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-–2021–ம் கல்வியாண்டிற்கான இளங்கலை கல்வியியல் (பி.எட்.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக 4–ந் தேதி முதல் 10-–ந் தேதி வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்ப […]

செய்திகள்

நீண்ட தூர ரெயில்களின் பயண நேரம் 6 மணி நேரம் வரை குறையும்

* ஆதரவு அதிகமில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்படும் * குறைவான பயணிகள் ஏறி, இறங்கும் நிறுத்தங்கள் கைவிடப்படும் ‘‘புதிய கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டால்… நீண்ட தூர ரெயில்களின் பயண நேரம் 6 மணி நேரம் வரை குறையும்’’ ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தகவல் புதுடெல்லி, டிச.2-– ‘‘புதிய கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டால், நீண்ட தூர ரெயில்களின் பயண நேரம் 6 மணி நேரம் வரை குறையும்’’ என்று ரெயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார். ரெயில்வே […]

செய்திகள்

புயல் சேதங்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி, டிச.2- புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதிக சேதம் ஏற்படாமல் தடுக்கவும், அத்தியாவசிய சேவைகளை விரைவில் தொடரவும் தகுந்த ஏற்பாடுகளை செய்யும் படியும் தமிழக, கேரள அரசுகளையும், லட்சத்தீவு நிர்வாகத்தையும் மத்திய மந்திரி சபை செயலாளர் ராஜீவ் கவுபா கேட்டுக்கொண்டுள்ளார். தெற்கு வங்க கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் நிலையில், இதுதொடர்பாக தேசிய நெருக்கடிநிலை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டத்தை மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா நேற்று தலைமை தாங்கி […]