செய்திகள்

அண்ணா தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை, ஆக. 27– அண்ணா தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த 300 மகளிர் உள்ளிட்ட 3000 பேர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– இன்றைய தினம் தமிழகத்திலே அண்ணா தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய […]

செய்திகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி 3 ஆயிரம் பேர் அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்

சென்னை, ஆக. 27– அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அமைப்புச் செயலாளர், மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 300 மகளிர் உள்ளிட்ட 3000 பேர் கூண்டோடு விலகி அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர். அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சென்னை ராயப்பேட்டை […]

செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த மனித ரோபோ

வாஷிங்டன்,ஆக.27– விண்வெளிக்கு ரஷ்யா முதல் முறையாக அனுப்பிய மனித உருவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா கடந்த 22ம் தேதி முதல் முறையாக பெடார் என்ற மனித ரோபோவை அனுப்பியது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலம் இந்த ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது. வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்ற விண்கலம், 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் […]

செய்திகள்

மருத்துவ மாணவருக்கு ரூ.2½ லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, ஆக.27– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 26–ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வரும் சேலம் மாவட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வன்னியர் இன மாணவர் எம். குபேந்திர நாட்டமைக்கு பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் சார்பில் நான்கரை ஆண்டுகால மருத்துவப் படிப்பின் விடுதிக் கட்டணமான 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான ஓப்புதல் கடிதத்தையும், நடப்பாண்டிற்கான விடுதிக் கட்டணமான 54 […]

செய்திகள்

தமிழக அரசிற்கு மத்திய அரசு விருதுகள்; ரூ.3 கோடி ஊக்க தொகை: எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் சரோஜா காண்பித்து வாழ்த்து

சென்னை, ஆக.27– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 26–ந்தேதி (நேற்று) அன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா சந்தித்து, புதுடில்லியில் 23.8.2019 அன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், போஷன் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் வழங்கப்பட்ட முதலிடத்திற்கான இரண்டு விருதுகள் மற்றும் இரண்டாம் இடத்திற்கான ஒரு விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். போஷன் […]

செய்திகள்

பணிக்காலத்தில் உயிரிழந்த 42 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, ஆக.27– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 26–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தொழில்நுட்ப கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் […]

செய்திகள்

டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு பரிசீலனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை,ஆக.27– மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–- அரசு மருத்துவ சேவை என்பது மகத்தான சேவை. அந்த பணியினை செய்து வரும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். நோயாளிகள் பாதிக்கப்படும் வகையிலும் உங்களுடைய உடல்நலம் பாதிக்கும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கிறது. பேச்சுவார்த்தை […]

செய்திகள்

ரூ.73 கோடி செலவில் 42 பள்ளி கட்டிடங்கள்: எடப்பாடி திறந்தார்

சென்னை, ஆக.27– ரூ.72 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 42 பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை […]

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை,ஆக.27– சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,685 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 29,480 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்திருக்கிறது. வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 49.80 ரூபாயாக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. முன்னதாகக் […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி நாளை வெளிநாடு பயணம்

சென்னை, ஆக. 27– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (28–ந்தேதி) வெளிநாடு செல்கிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் செல்லும் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் (செப்டம்பர்) 10–ந்தேதி சென்னை திரும்புகிறார். அவரது வெளிநாட்டு பயணம் பற்றி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– தொழில் துறையில் மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டும் எனில், அந்த மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர் மட்டும் அல்லாமல், பிற மாநிலங்களைச் […]