செய்திகள்

இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு: திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர், ஜன. 1– இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் இணைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25,000 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 பயனடைய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நலத்துறை பணியாளர்களிடம் கீழ்காணும் ஆவணங்களை அளித்து இ-சேவை […]

செய்திகள்

2 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத் தொகை: கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்

கடலூர், ஜன. 1– கடலூர் மாவட்டத்தில் இரண்டு சிறந்த எழுத்தாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் என 10 நபர்களுக்கும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளுக்கு உதவித்தொகை ரூ.40,000 தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 2017-2018 -ம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்தில் […]

செய்திகள்

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்

திருவண்ணாமலை, ஜன. 1– திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, காந்தி நகர், விநாயகர் கோயில் அருகில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையர் அலுவலகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர். சேவூர் எஸ். இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, […]

செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 3031 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

திருப்பத்தூர், ஜன. 1– வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 3031 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளை சார்ந்த 3031 மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்காயம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் +1 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 47 […]

செய்திகள்

தமிழகத்தில் 937 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை,ஜன.1– தமிழகத்தில் நேற்று 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 68 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 573 ஆண்கள், 364 பெண்கள் என மொத்தம் 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 259 பேரும், கோவையில் 89 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தென்காசியில் […]

சினிமா செய்திகள்

‘கொரோனா’ வந்தது; மறுமலர்ச்சி தந்தது; சினிமாவிலும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வென்றது!

* ‘ஆன்லைன்’ ரிகசர்சல் * ‘ஆன்லைன்’ ஆக்க்ஷன் * ‘ஆன்லைன்’ எடிட்டிங் * ‘ஆன்லைன்’ டைரக்க்ஷன் ‘கொரோனா’ வந்தது; மறுமலர்ச்சி தந்தது; சினிமாவிலும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வென்றது! கவுதம் மேனன், சுகாசினி மணிரத்னம் அனுபவம் புதுமை உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் எதிரொலியாக மார்ச் மூன்றாவது வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டன. சினிமா துறை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துப் போனது. பின்னர் அரசின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு திரை அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. […]

செய்திகள்

6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தடுப்பூசி போட 21,700 பேருக்கு பயிற்சி பிரமாண்ட ‘முககவச’ மாதிரியை திறந்துவைத்தார் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அம்மா மினி கிளினிக்கில் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 6 ஆயிரம் பேர் நியமனம் சென்னை, ஜன. 1- தமிழகத்தில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு 17 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துக்கல்லூரி […]

செய்திகள்

சென்னையில் 1152 வீடுகள்: மோடி அடிக்கல்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.116¼ கோடி செலவில் சென்னையில் 1152 வீடுகள்: மோடி அடிக்கல் 413 சதுரஅடியில் ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை, பால்கனி 6 மாநிலங்களில் தமிழகம் ஒன்றானதில் பெருமகிழ்ச்சி: முதல்வர் எடப்பாடி பேச்சு புதுடெல்லி, ஜன.1– ‘‘அனைவருக்கும் வீடு’’ திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்படும் 1,152 வீடுகளுக்கு காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு (2022)க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் இந்தத் திட்டத்தை பிரதமர் […]

செய்திகள்

பைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்: உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனீவா, ஜன. 1– பைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் பைசர் தடுப்பு மருந்தை கொரோனா பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்த தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் ஏற்று கொண்டது சாதகமான நிலையாகவே பார்க்கப்படுகிறது. பைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால […]

செய்திகள்

கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: பக்தர்கள் குவிந்தனர்

சென்னை, ஜன. 1– 2021ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி கோவில்களில் இன்று புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கட்டுப்பாடு தளர்வுகளால் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாட்டால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்திருந்தாலும் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் தரிசனத்துக்கான விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு […]