செய்திகள்

விசாரணை கைதிகள் 2 பேர் நெல்லையில் தப்பி ஓட்டம்

திருநெல்வேலி, செப். 22– திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று காலையில் அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று பணம் எடுப்பதற்காக ஏடிஎம் அறைக்குள் 2 பேர் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த காவலாளி வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் […]

Loading

செய்திகள்

மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

புதுடெல்லி, செப்.22-– மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்கள வையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது கூறியதாவது:- நாம் ஒரு புதிய வளாகத்திற்கு வந்துள்ளோம், நாடாளு மன்றத்துக் கான புதிய கட்டிடம், […]

Loading

செய்திகள்

மதுவில் சானிடைசரை கலந்து குடித்த 2 பேர் பலி

தஞ்சாவூர், செப். 22– கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 தொழிலாளர்கள் பலியானார்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான கருணகொல்லைத் தெருவை சேர்ந்த சௌந்தரராஜ் (வயது48), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பாலகுரு(வயது 43) 2 பேரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தனர். காவிரி படிக்கட்டில் அமர்ந்து மதுவில் சானிடைசர் கலந்து குடித்தாக கூறப்படுகிறது. 2 பேரும் பலி இந்த நிலையில், இன்று காலை அந்த […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, செப். 22– இந்தியாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 461 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 44 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திலும் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,98,338 […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை, செப். 22– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை அண்மை காலமாக கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்தவகையில், நேற்று தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,530 க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240 க்கும் விற்பனையான நிலையில் இன்று மேலும் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. மேலும் ரூ.160 குறைவு அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை […]

Loading

செய்திகள்

நாளை மறுநாள் இயக்கப்பட உள்ள சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில்: கட்டண விவரங்கள் வெளியீடு

சென்னை, செப். 22– நாளை மறுநாள் இயக்கப்பட உள்ள சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயிலில் பயணம் மேற்கொள்ள கட்டண விவரங்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரெயில்வேயில் சென்னை – மைசூர், சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிரிட்டன், இந்திய உறவுகள் மேம்பட வழியுண்டா? சர்வதேச அரசியலில் சாதூர்யமாக நடைபோடும் பிரதமர் மோடி

* விஜய் மல்லையா, நீரவ் விவகாரம் ஐரோப்பிய யூனியனின் புறக்கணிப்பு நாடும் நடப்பும்– ஆர்.முத்துக்குமார் பத்து நாட்களுக்கு முன்பு நிறைவேறிய ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தரப்பட்ட ‘முதல் மரியாதை’ ஏனைய பிற தலைவர்களுக்கு தரப்படாதது அனைவர் கண்களிலும் தெளிவாகவே காண முடிந்த ஒன்று. பைடனுக்கு நமது பிரதமர் மோடி பிரத்தியேக விருந்தை தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். பைடனின் வருகைக்காக மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது இல்லம் மகாராஜாக்களின் […]

Loading

செய்திகள்

கோச்சிங் சென்டர்களுக்கு பணம் கட்டுவதற்கு மட்டுமே ‘நீட்’ தேர்வு

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் சென்னை, செப். 21– முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க ‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் போதும் என்றால், ‘நீட்’ கோச்சிங் சென்டர்களுக்கு பணம் கட்டுவதற்காகவே அந்த தேர்வா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க ‘நீட்’ தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதனை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்(எக்ஸ்) […]

Loading

செய்திகள்

துணைவேந்தர் தேடுதல் குழுவில் கவர்னர் நியமித்த பிரதிநிதியை தமிழக அரசு நிராகரித்தது

சென்னை, செப்.21-– துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் கவர்னர் நியமித்த உறுப்பினரை தமிழ்நாடு அரசு நிராகரித்ததோடு, அதனை அரசிதழிலும் வெளியிட்டு உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியானதும், அந்த இடங்களுக்கு தகுதியானவரை தேர்வு செய்ய பல்வேறு நிலைகள் உள்ளன. அதன்படி, துணைவேந்தர் தேடுதல் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவின் விவரங்கள் அரசிதழிலும் வெளியிடப்படும். அந்த குழு, துணைவேந்தர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்ப வர்களில் 3 பேரை தேர்வு செய்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான […]

Loading

செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை, செப். 21– தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, […]

Loading