செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை, ஜன.9–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560–-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78 ஆயிரத்து-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *