செய்திகள்

3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்’’ : பிரதமர் மோடி உறுதி

‘‘இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்’’ ‘‘பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி; எந்தவிதத் தயக்கம், சுணக்கம் இல்லாமல் ஒடுக்க வேண்டும்’’ நியூயார்க், ஜூன் 23– ‘3–வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்’ என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அசைக்க முடியாத நம்பிக்கையோடு வெளியிட்டார். “இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்” என்று உறுதிபடக்கூறிய மோடி, பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி; இதை எந்தவித தயக்கமும், சுணக்கமும் இல்லாமல் ஒடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். – பிரதமர் மோடி […]

Loading

செய்திகள்

கோவில் திருவிழா: தனிப்பட்டவர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது

ஐகோர்ட் தலைமை அமர்வு உத்தரவு சென்னை, ஜூன் 23– கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு சாந்தி வீரன் சாமி கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூன் 23– மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் 28 ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘மாமன்னன்’. இந்த படம் ஜூன் 29ஆம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு […]

Loading

செய்திகள்

புதிய நாடாளுமன்ற திறப்பு: ஜனாதிபதியை சபாநாயகர், பிரதமர் யாரும் அழைக்கவில்லை

குடியரசு தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவல் டெல்லி, ஜூன் 23– புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கடந்த மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவில் […]

Loading

செய்திகள்

இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது: ஒபாமா பேட்டி

நியூயார்க், ஜூன் 23– இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை, ஜூன் 23– தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறுைந்து 43,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக தங்கம் மாறியுள்ளது. அதனால், மக்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் அண்மை காலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. சவரனுக்கு ரூ.320 குறைவு அந்த வகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 5485 ரூபாய்க்கும், சவரனுக்கு […]

Loading

செய்திகள்

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேர் பலி

நியூயார்க், ஜூன் 23– புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பார்வையிட 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக மீட்புக் குழுவினர் அறிவித்ததையடுத்து, அதில் பயணம் செய்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. ஏப்ரல் 14-ம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதி நீரில் முழுவதுமாக […]

Loading

செய்திகள்

கேரளாவில் முதல்வர் பினராயி உள்பட 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்

திருவனந்தபுரம், ஜூன் 23– கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாநிலத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு பொதுமக்கள் பலருக்கும் வைரஸ், டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 20 நாட்களில் 1.60 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.24 அடி: 11 நாளில் 7 அடி சரிவு

மேட்டூர், ஜூன் 23– கடந்த 11 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 7.11 அடி சரிந்துள்ள நிலையில் இன்று அணை நீர்மட்டம் 96.24 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் கடந்த 11 […]

Loading

செய்திகள்

வெள்ளை மாளிகையில் மோடிக்கு இரவு விருந்து

முகேஷ் அம்பானி, சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை பங்கேற்பு வாஷிங்டன், ஜூன் 23– பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, தனது மனைவி நீட்டாவுடன் கலந்து கொண்டார். கூகுள் சிஇஓ. சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ. சத்யா நாதெள்ளா, பெப்சிகோ முன்னாள் சிஇஓ. இந்திரா நூயி, மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, ‘அடோப்’ தலைவர் சாந்தனு நாராயண் உள்ளிட்ட பலரும் இந்த […]

Loading