சினிமா

அதிநவீன டிஜிட்டல் ஒளி – ஒலி அமைப்புகளுடன் விரைவில் சிவாஜிகணேசன் – வாணிஸ்ரீ நடித்த “வசந்த மாளிகை”

சென்னை, செப் 12– நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் “வசந்த மாளிகை”திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, “மயக்கம் என்ன”, “கலைமகள் கைப்பொருளே”, “இரண்டு மனம் வேண்டும்”, “ஏன் ஏன் ஏன்” ஆகிய பாடல்களை டி. […]

சினிமா

“லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க”: இப்படியும் ஒரு சினிமா டைட்டில்

“லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க” – முழுக்க முழுக்க பேமிலி காமெடி சப்ஜெக்ட். இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம். தயாரிப்பாளர் சரவணன் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்….தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள். என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள்.. என்ன மாதிரியான படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அத்துப்படி. அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதை தான் இந்த லைக் […]

சினிமா

‘அம்பேத்கர் இழுத்து நிறுத்திய தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வேன்’’; சினிமா டைரக்டர் ரஞ்சித் உறுதி

சென்னை, செப்.10– ‘‘யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல, அனைவருடனும் கைகோர்த்து உரையாடவே நான் விரும்புகிறேன்’’ இயக்குநர் பா.இரஞ்சித் கூறினார். ‘அம்பேத்கர் இழுத்து நிறுத்திய தேரை, முன்னோக்கி இழுத்துச் செல்வேன்’ என்று அவர் உறுதிபடக் கூறினார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, […]

சினிமா

‘காட்டுக்கு ஓடிப்போய் வாழ்ந்து சாகலாமா யோசனை வருகிறது’: பாரதிராஜா வேதனைப் பேச்சு

சென்னை, செப் 10– ‘‘கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது’’ என்று பிரபல டைரக்டர் பாரதிராஜா வேதனையோடு கூறினார். கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு ‘மரகதக்காடு’ படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் (என் சிஷ்யன்) இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினார். […]

சினிமா

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு நேரில் போய் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட ‘கண்ணாளனே…’ பாடல்

சென்னை, செப்.6– மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டு ஆண்டாள் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் அர்விந்த் சாமி, தியாகராஜன், விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை, மணிரத்னம் அறிமுகப்படுத்தியப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள 16–வது படம் இது. முதல் […]

சினிமா

‘அரை நிர்வாண’ போசில் அதிர்ச்சியூட்டும் அமலாபால்

‘ஆடை’ – இது படத்தின் டைட்டில். இதில் நடிக்க அதீத உடல் பலமும், மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள், (மொபைல் டேட்டா), அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை என்று சொன்னார் இயக்குனர் ரத்னகுமார். ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் […]

சினிமா

‘சிகப்பு ரோஜாக்கள்’ கமல் ஸ்டைலில் ‘ஹை வோல்டேஜ்’ வில்லனாக ஜித்தன் ரமேஷ்!

யஷ்வந்த் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரவி செளத்ரி நாகார்ஜுனா தயாரிக்கும் பிரமாண்டமான படத்தில் ஜித்தன் ரமேஷ் அதிரடி வில்லனாக நடிக்கிறார். ஜித்தன் ‘மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம்’ உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர். நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார், அதுவும் பக்கா வில்லனாக. படத்திற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை. கதாநாயகனாக சாய், கதாநாயகி வங்காளத்தை சேர்ந்த புதுமுகம் […]

சினிமா

‘காவல்துறை – உங்கள் நண்பன்’

“நமது உணர்வுகள் தான் நம் வாழ்வை வழிநடத்தும் சக்திகளாக இருக்கின்றன” என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன. ‘மோ’ என்ற திகில் திரைப்படம், ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் ஆர்டிஎம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு […]

சினிமா

சென்னையை கலக்கும் ‘சூதாட்ட’ பைக் ரேஸ் சினிமா

சென்னையில் ஞாயிறுதோறும் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டத்துக்கு விரோதமான பைக் ரேஸ் பற்றிய கதை ‘46’. இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குனர் டி.ஆர். பாலா. இந்த சட்ட விரோத பைக் ரேசால் என்னென்ன பின்விளைவுகள் […]

சினிமா

பணக்கார முதலைகளுக்கு கைக்கூலியாகும் இளைஞர்களின் கதை ‘கூலிப்படை’

‘கூலிப்படை’ – பாரதி கலைக்கூடம் சார்பில் ஏ.ராமதாஸ் தயாரிக்கிறார். அலைபேசி இயக்குனர் முரளி பாரதி, கதை வசனம் எழுதி இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் – நாயகன். அனுகிருஷ்ணா – நாயகி. கூலிப்படை தலைவனைக் காதலிக்கும் கல்லூரி மாணவியால் ஏற்படும் பிரச்சனைகளை காவல்துறை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பது கதை. அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கைக்கூலியாகி சீரழியும் இளைஞர்கள் பின்னர் கூலிப்படைகளாக மாறுவது எப்படி என்று சொல்ல வரும் கதை. சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கொடைக்கானலில் […]