வர்த்தகம்

சிறந்த மக்கள் தொடர்பு நிறுவனமாக ‘கேட்டலிஸ்ட் தேர்வு’

சிறந்த மக்கள் தொடர்பு நிறுவனமாக ‘கேட்டலிஸ்ட் தேர்வு’:

சாதனை விருதை ராம்குமார் சிங்காரத்திடம் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் வழங்கினார்

சென்னை, பிப். 28–

சிறந்த மக்கள் தொடர்பு நிறுவனமாக ‘கேட்டலிஸ்ட் தேர்வு’ செய்யப்பட்டது. இதற்கான சாதனை விருதை நிறுவனர் ராம்குமார் சிங்காரத்திடம் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் வழங்கினார்.

இணைய வழியில் நடைபெற்ற இந்த சங்க 42–வது ஆண்டு மாநாட்டில், மக்கள் தொடர்புத் துறையில் 2020–ம் ஆண்டிற்கான சிறந்த திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னையில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகளுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவுக் கூறும் வகையில் ‘பொங்கல் விழா’ நிகழ்ச்சிகளை தத்ரூபமாக நடத்தியமைக்காக இந்த விருது கேட்டலிஸ்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநர் பேபி ராணி மவுரியா இந்த அமைப்பின் தேசியத் தலைவர் அஜித் பாதக் ஆகியோரின் முன்னிலையில், இவ்விருதினை, கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராம்குமார் சிங்காரம் பெற்றுக் கொண்டார்.

2020–ம் ஆண்டுக்கான பி.ஆர்.எஸ்.ஐ. தேசிய விருதுகளுக்காக 36 வகைப்பாடுகளில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் அரசுத் துறை நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும், தனியார் மக்கள் தொடர்பு நிறுவனங்களும் தாங்கள் செய்து முடித்த சுமார் 1000–த்திற்கும் மேற்பட்ட பிரச்சாரத் திட்டங்களை விருதுகளுக்காகத் தாக்கல் செய்திருந்தன. பல்வேறு நடுவர்களைக் கொண்டு பலகட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளுக்குப் பிறகு, இறுதியாக 100 திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 3 விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கிடைத்தன. அதில் ஒன்று, கேட்டலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வழங்கப்பட்ட 100 விருதுகளில் இந்த விருதினைப் பெற்ற இரண்டே இரண்டு மக்கள் தொடர்பு நிறுவனங்களில் கேட்டலிஸ்ட் மக்கள் தொடர்பு நிறுவனமும் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *