செய்திகள்

சாதி வாரியான கணக்கெடுப்பு: அரசின் முடிவுக்கு கருணாஸ் பாராட்டு

சென்னை, டிச.3-–

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவுக்கு கருணாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.

மத்திய அரசு அறிவித்த சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்தக்கோரி, 68 சமுதாய மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். இந்த ஆணையம் விரைவாக செயல்பட்டு அந்தந்த சமூகத்தினரின் சமூக நீதியை நிலைநாட்ட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *