செய்திகள்

சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, வளைகுடா நாடுகளுக்கு புதிய வாராந்திர சரக்கு கப்பல் சர்வீஸ் டி.பி.வோர்ல்ட் நிறுவனம் அறிமுகம்

Spread the love

சென்னை, நவ. 8–

டி.பி.வோர்ல்ட் சரக்கு போக்குவரத்து நிறுவனம் 2 புதிய சரக்கு கப்பல் போக்குவரத்தை அறிமுகம் செய்துள்ளது. விசாகப் பட்டினத்திலிருந்து சென்னை, தூத்துக்குடி, கொழும்பு வழியாக வளைகுடா நாடுகளுக்கு சரக்கு கப்பல் வாரம் ஒருமுறை சென்று திரும்பும் வசதியுடன் நிர்வகிக்கிறது.

இது புதியதாக வளைகுடா நாடு – இந்தியா – ஆப்ரிக்கா வாரந்திர சரக்கு கப்பல் போக்குவரத்தை துவக்கி உள்ளது.

இது மும்பை நவசேவா கண்டெய்னர் டெர்மினலை, மேற்கு பகுதி நகரங்கள் வழியாக ஆப்பிரிக்காவை இணைக்கிறது. 2–வது வாரந்திர கப்பல் சர்வீஸ் சென்னை டெர்மினல், இந்திய டெர்மினலை ஆப்பிரிக்காவுடன் இணைக்கிறது.

இதற்காக இந்த இரண்டு வாரந்திர கப்பல் சேவைக்கு மொத்தம் 18 கப்பல்கள் இயக்கப்படுகிறது என்று தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ரிஸ்வான் சூமர் தெரிவித்தார்.

முதல் ரக சரக்கு கப்பல் மும்பை நவசேவா துறைமுகத்திலிருந்து கிளம்பி, கொழும்பு, ஆப்ரிக்கா டர்பன், கேப் டவுன், வழியாக சுபாபா சென்று திரும்பும்.

இரண்டாவது சரக்கு கப்பல் விசாகப்பட்டினம், கிருஷ்ணபட்டினம், சென்னை, தூத்துக்குடி, கொழும்பு, கொச்சி, ஜெத்தா, கொழும்பு வழியாக சென்னை, விசாகப்பட்டினத்தை அடையும்.

இந்த 2 புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து மூலம் இந்திய தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை துரிதமாக ஏற்றுமதி செய்ய, இறக்குமதி செய்ய டி.பி.வோர்ல்ட் திறமையாக செயல்பட்டு உதவும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *