செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்டுகளுக்கான எல்லை மறுவரையறை பணிகள்

காஞ்சீபுரம், ஜன.29-–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்டுகளுக்கான எல்லை மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சிகள் நிர்ணயம் செய்யப்பட்டு, 1. காஞ்சீபுரம், 2. வாலாஜாபாத், 3. உத்திரமேரூர், 4. ஸ்ரீபெரும்புதூர், 5.குன்றத்தூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளடக்கிய காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான கிராம ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான எல்லை மறுவரையறை பணிகள் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *