செய்திகள்

இருதய சிகிச்சை நிபுணர் இளங்கோவன் எழுதிய ‘இதயச் சாரல்’ கவிதை நூல்: நீதிபதி ஜெகதீசன் வெளியிட்டார்

Spread the love

சென்னை, அக். 12

இருதய சிகிச்சை நிபுணர் எஸ்.இளங்கோவன் ‘இதயச் சாரல்’ என்னும் தமிழ் கவிதை நூல் எழுதியுள்ளார். உலக இருதய நாள் விழிப்புணர்வாக ‘இருதயம் இதமாய் இருந்திட’ என்னும் தலைப்பில் 2 கவிதைகளும், தமிழ் வளர்ச்சி அறிஞர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை தந்தை டாக்டர். ஆன்ட்ரியாஸ் பற்றிய மருத்துவ கவிதையும், இவரது 50 ஆண்டு கால மருத்துவ அனுபவக் கவிதையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்த நூலை நீதிபதி ஜெகதீசன் வெளியிட, தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக இருதய சிகிச்சை மருத்துவரும், ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ பாடுபட்டவருமான டாக்டர் விஜயா ஜானகிராமன் பெற்றுக் கொண்டனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் உலக தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் டைரக்டர் எஸ்.ராமர் இளங்கோ, மருத்துவர்கள் எஸ்.வைத்தியநாதன், எஸ்.சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *