செய்திகள்

‘சிறந்த வாலண்டியர்’: அமைச்சர் பாண்டியராஜன் விருது

Spread the love

சென்னை, டிச. 4

சென்னை நகரில் நடைபெறும் இயல் இசை நாடக நாட்டிய விழாக்களில் சிறப்பு விருந்தினர்களை அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களை இருக்கையில் கொண்டுபோய் உட்கார்த்தும் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக கே.குமாருக்கு ‘வாலண்டியர்’ பணிக்கான சிறந்த விருதை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி வாழ்த்தினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபா கலையரங்கத்தில் நடந்த விழாவில் மயிலாப்பூர் அகாடமி, குமாருக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தது. நீதிபதி ஜெகதீசன், நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

பிஎஸ்சி பட்டதாரியான குமார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மாலை நேரத்தில் பார்த்தசாரதி சுவாமி சபா, பிரம்ம கான சபா, நாரதகான சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹம்சத்வனி சென்னை நகரில் நடத்தும் விழாக்களில் ‘வாலண்டியராக’ செயலாற்றுகிறார். இதில் 35 ஆண்டு காலம் அனுபவம் பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *