சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

பொங்கலுக்கு வெளியாகும்

மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை:

சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 8–

பொங்கலுக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலும், கேபிள் டிவிக்களிலும் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலும், கேபிள் டிவிக்களிலும் வெளியிடுவதை தடுக்க கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக வெளியிடப்படாமல், தற்போது பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் மாஸ்டர் படம் சட்டவிரோதமாக வெளியானால் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என வாதிட்டார். அதனால் சட்டவிரோதமாக 400 இணையதளங்கள் மற்றும் 9 கேபிள் டிவி ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்கும்படி 29 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், 9 கேபிள் டிவி நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி, மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *