செய்திகள்

வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளராக நா.பாலகங்கா நியமனம்

சென்னை, பிப்.8–

வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக மீண்டும் நா.பாலகங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள்.

மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார்கள்.

மாவட்ட கழக செயலாளராக மீண்டும் நா.பாலகங்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். மாவட்ட அவைத் தவைராக சீமா பஷீர், இணைச் செயலாளராக குமாரி நாராயணன், துணை செயலாளர்களாக எஸ்.வள்ளி, ஆவின் அருள்வேல், மாவட்ட பொருளாளராக எம்.முகமது இம்தியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக எம்.சரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பிராட்வே எம்.இஸ்மாயில் கனி, மாவட்ட மகளிர் அணி செயலாளராக டி.வேளாங்கண்ணி என்ற கஸ்தூரி, மாணவர் அணி மாவட்ட செயலாளராக எம்.பயாஸ் அகமது, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக பி.ஆர்.பீமாராவ், வழக்கறிஞர் பிரிவு செயலாளராக டீக்ராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளராக ஏ.ஆர். தமீம், மருத்துவ அணி செயலாளராக டாக்டர் கோவிந்தராஜூ, இலக்கிய அணி செயலாளராக எம்.தங்கபாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளராக ஜி.விசு என்ற விசுவாசி,

மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக லண்டன் எம்.வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக ரஞ்சித் பெர்னாண்டோ, வர்த்தக அணி செயலாளராக பைசல் பாஷா என்கிற எஸ்.எம். பாஷா, கலைப்பிரிவு செயலாளராக நடிகர் ஜி.ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர்களாக எல்.தாட்சாயிணி, மின்னல் ரவி, புரசை எம்.கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எழும்பூர் வடக்கு பகுதி கழக செயலாளராக டி.மகிழன்பன், எழும்பூர் தெற்கு பகுதி கழக செயலாளராக ஏ.சம்பத்குமார், துறைமுகம் வடக்கு பகுதி செயலாளராக எம். கன்னியப்பன், துறைமுகம் தெற்கு பகுதி செயலாளராக வி.பி.எஸ்.மதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *