வாழ்வியல்

அயிரை மீன்கள் வளர்க்கும் முறை!–2

அயிரை மீன்களின் வகைகள்

உணவுக்காக பயன்படுத்தும் அயிரை மீன் மூன்று வகை. அவை லேப்பிடோசெப்பளஸ், கோரமண்டலின்சில், லேப்பிடோசெப்பளஸ் மேக்ரோசீர், லேப்பிடோசெப்பளஸ் ஸ்பெக்ரம்.அயிரை மீன் அமைதியாகவும் தொடர் நீர் பகுதியில் வசிக்கும் தன்மை உடையது. கற்கள் உள்ள இடங்களில் அதிகமாக மீன் வசிக்கும். குளத்தின் அடிப்பகுதியில் முக்கிய பொருட்களை மற்றும் அழுகிய பொருட்களை உணவாக உட்கொள்கிறது.

அயிரை மீன்கள் நடுத்தரமான கார அமில நிலை மற்றும் லேசான காரத்தன்மை உள்ள நீரில் வளரக்கூடியது. மீன்கள் 6.5முதல் 8.5வரை நீரில் கார அமில நிலை கொண்ட நீரில் வளரக்கூடியவை.

இனப்பெருக்கம்

அயிரை மீனானது மணற்பாங்கான தரைப்பகுதியில் மற்றும் சிறிய கற்கள் உள்ள நீர் தரைப் பகுதியில் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யும். அயிரை மீன், குளம், ஏரி மற்றும் வாய்க்கால் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யும். அயிரை மீனின் இனப்பெருக்கம் காலம் ஜனவரி முதல் ஜீலை வரை ஆகும், பிறகு இனமுதிர்ச்சி அடைந்த ஆண்-,பெண் மீன்களை தேர்வு செய்து, ஒரு ஆண் மீனுக்கு ஒரு பெண் மீன் என்று இருப்பு செய்ய வேண்டும்.

15 முதல் 20 நாட்களில் மீன் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இனப்பெருக்க காலத்தில் ஆண், பெண் மீன்களுக்கிடையே போட்டி மனப்பான்மை இருக்காது. அயிரை மீன் வளர்ப்பது மிகவும் எளிதாகும். அயிரை மீன்களை 10 கி.கி 1 ஏக்கர் என்ற அளவில் கிடைக்கின்றது. இது கெண்டை மீனிலிருந்து வரும் வருமானத்தை விட அயிரை மீனில் இருந்து வரும் வருமானம் அதிக அளவு லாபம் ஈட்டலாம்.

மேலும் விபரம் அறிய…

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வளங்குன்றா நீர் உயிர் வளர்ப்பு பறக்கை மையம்,

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்,

பறக்கை – 629601,

கன்னியாகுமாரி மாவட்டம்.

தொலை பேசி எண் : 04652 286107

மின்னஞ்சல் : pkkcesatnfu@gmail.com

www.tnjfu.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *