வாழ்வியல்

குளிர்பானம் குடிப்பதால் வரும் உடல் பாதிப்புகள்!

Spread the love

குளிர்பானம் என்பது அதிக அளவில் டிரக்டோஸ் எனும் சர்க்கரையும் கார்பன்டை– ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை. முக்கியமாக, தாகம் தணிவதும் இல்லை. குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காபீன் சேர்க்கிறார்கள்.

இனிப்பை நிலைப்படுத்துவதற்காக சிட்ரிக் அமிலம் பாஸ் பாரிக் அமில் போன்வற்றைக்கலக்கிறார்கள். வண்ணத்தை அதிகரிப்பதற்காக கேராமல் பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர அஸ்பரடேம் போன்ற செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியன, அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உடல் உறுப்புகளுக்கு ஆபத்தை தரக்கூடியவை குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில் தான் குடிக்கிறோம். இதனால், இவை உடலுக்கு குளிர்ச்சியை செய்து தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இந்த எண்ணம் முற்றிலும் தவறு.

உண்மையில் குளிர்பானங்களை விரும்பி அருந்தும் போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த நாளங்களை சுருக்கி உடலின் வெப்பத்தை மேலும் அதிகரித்து விடுகிறது. மீண்டும் மீண்டும் குளிர்ந்த மென்பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இவை உங்கள் அனுபவத்திலேயே உணரமுடியும்.

குளிர்பானங்களில் உள்ள ‘பிரக்டோஸ் கார்ன் சிரப்’ என்னும் சர்க்கரை, ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. 250 மி.லி குளிர்பானத்தில் 10 தேக்கரண்டி அளவுக்குச் சக்கரை உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை பல மடங்கு அதிகரிக்கிறது. கணையத்தில் இருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. மென் பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு, இப்படி இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால் இளம் வயதிலேயே கணையம் களைத்து விடுகிறது.

இதன் விளைவால் இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் ‘டைப்டூ’ நீரிழிவு நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்கு குளிர்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்றது ஆய்வு.

தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்பானம் குடிக்கும் போது, ரத்தச்சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச்சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.

இதுபோல் படிப்படியாக சேமிக்கப்படும் கொழுப்பு உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன், இளம் பருவத்திலேயே இதயநோய், உயர்ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் என்று பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இதுபோன்ற குளிர்பானங்களை அருந்தும் முன்னர், உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது உங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *