செய்திகள்

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

சிம்லா, ஜன. 18–

இமாச்சல் பிரதேசத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வயது 103.

இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 1917ம் ஆண்டு ஜூலை 1ல் பிறந்த ஷியாம், 1951–-52ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் முதல்நபராக வாக்களித்தார். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான ஷியாம், இது குறித்து கூறியதாவது:

1952ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்றது. மலைப் பகுதிகளில் வானிலை உள்ளிட்ட பிரச்னைகளால் 5 மாதங்கள் முன்னதாக 1951 அக்டோபர் 23ம் தேதியே தேர்தல் நடைபெற்றது. அப்போது, நான் பள்ளி ஆசிரியராக இருந்தேன். தேர்தல் பணியிலும் பங்கேற்றேன்.

எனது வாக்குச்சாவடியான கின்னோரில் உள்ள பள்ளியில் முதல் நபராக காலை 7 மணிக்கு வாக்களித்தேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது இருந்து இதுவரை பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்ததாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *