செய்திகள்

அறப்போர் இயக்கத்தின் சமூக வலைதளங்கள் முடக்கம்: சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை

Spread the love

சென்னை, டிச. 2–

சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றி அவதுாறு பரப்பியதாக வந்த புகாரின் பேரில் அறப்போர் இயக்கத்தின் சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அறப்போர் இயக்கம் அரசியல் கட்சிகளின் பல்வேறு நடவடிக்கைகளை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை, மின்வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறைகளின் பல்வேறு நடவடிக்கைகளை தங்களது சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பரப்புவதாகவும், அந்த இயக்கம் தனிப்பட்ட நபர்களை குறிவைத்து மீம்ஸ் வெளியிட்டு வருவதாகவும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அறப்போர் இயக்கத்தினர் தொடர்ந்து அவதூறான தகவல்களை பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர் பக்கம் இணையத்தில் முடக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இத குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், அறப்போர் இயக்கத்தினர் தவறான சில ஆதாரங்களை உண்மை என நம்பும் படி டுவிட்டரில் வெளியிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. திட்டப்பணிகள் தொடர்பாக மக்களை ஏமாற்றும் வகையிலான பதிவுகளையும் அவர்கள் டுவிட்டரில் பதிவேற்றம் செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அறப்போர் இயக்கத்தின் 8,558 பாலோயர் கொண்ட வலைதள பக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவதூறான கருத்துக்களை ஆதாரமின்றி சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *