செய்திகள்

மலர் அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி

காஞ்சீபுரம், டிச. 16–-

மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, கோவில் மாநகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து சைவ, மற்றும் வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற அழகிய சிங்கபெருமாள் கோவில் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் அதிகாலையில் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று கற்பூர தீபாராதனைகள் நடைபெற்றது. பிறகு கோவிலில் திருப்பாவை பாடப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பெருமாளையும், ஆண்டாளையும் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *