செய்திகள்

பாதசாரிகள், வாகனங்களில் போகிறவர்களை கவர்ந்திழுக்கும் ‘அமுதா டெக்கார்ஸ்’ கட்டிடம்: சிவகுமாரின் புதிய தொழில்நுட்பத்திற்கு பாராட்டு

Spread the love

‘லோக்ஆயுக்த்’ உறுப்பினர் டாக்டர் ராஜாராம், தனலட்சுமி என்ஜினீயரிங் துணைத்தலைவர் ராமமூர்த்தி வாழ்த்து

சென்னை, டிச.2

கட்டிடக்கலையில் 22 ஆண்டுகள் மிக்க அனுபவம் பெற்றிருக்கும் நிபுணர் கே.சிவகுமார், மௌண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சரவணா ஸ்டோர்ஸ் அருகில் நிர்மாணித்து இருக்கும் ‘அமுதா டெக்கார்ஸ்’ என்னும் நிறுவனத்தின் 2 மாடி ஷோரூம் கட்டிடத்தை இன்று காலை தமிழ்நாடு ‘லோக்ஆயுக்த்’ உறுப்பினர் டாக்டர் ராஜாராம், தனலட்சுமி என்ஜினீயரிங் துணைத்தலைவர் ராமமூர்த்தி, அவரது துணைவியார் திறந்துவைத்து சிவகுமாருக்கு வாழத்துக் கூறினார்கள்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த எழில்தோற்றக் கட்டிடம், அப்பகுதியில் செல்வோரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திழுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிடக்கலை நிபுணர் சி.ஆர்.ராஜூ, சிவகுமாரின் துணைவியாரும் அரசு வேல் ரூஃபிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்டிடக்கலை நிபுணர்கள், கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகள், என்ஜினீயர்கள், தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் பலரும் நேரில் பங்கேற்று சிவகுமாரின் புதிய தொழில்நுட்ப முயற்சியை மனம் திறந்து பாராட்டினார்கள். புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பு, செயல்பாட்டை சிவகுமார் விளக்கினார்.

இந்த ஷோரூம் கட்டிடத்தின் சிறப்பு அம்சமே இதைக் கட்டுவதற்கு செங்கல்லைப் பயன்படுத்தவில்லை; இதேபோல சிமெண்ட் கலவையையும் பயன்படுத்தப்படவில்லை என்பதாகும். இரும்புக் கம்பிகள் மற்றும் மின் இரும்புத் தூண் களைக் கொண்டு நிர்மாணித்திருக்கிறார்கள்.

கோடையில் வாட்டி எடுக்கும் வெயிலின் தாக்கம் கட்டிடத்திற்குள் தெரியாது. இதேபோல வெளியில் பெய்யும் அடை மழையின் சத்தமும் கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு கேட்காது. இடி மின்னல் மழை வெள்ளம் புயல் சூறாவளி நிலநடுக்கம் இப்படி எந்த ஒரு இயற்கையின் சீற்றத்தாலும் கட்டிடத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. 60 நாளில் கட்டலாம்

பொதுவாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எப்படி ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் ஒருவரை சிவில் இன்ஜினியரை கலந்து ஆலோசித்து அவருடைய யோசனையின் பேரில் வீடு கட்டிடம் கட்ட ஆரம்பிக்கிறோமோ அதைப்போலவே ஸ்டிரக்சுரல் இன்ஜினியர் ஆலோசனை கேட்டு சிவகுமார் நிர்மாணப் பணிகளில் இறங்குகிறார்.

2 மாடி கொண்ட ஒரு வீட்டை கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு பிடிக்கும் என்றால் இங்கே இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் அதே இரண்டு மாடிக் கட்டிடத்தை 60 நாட்களில் கட்டி முடித்து விடலாம். இதனால் காலம் நேரம் மிச்சமாகும்.

பொதுவாக ஒரு சதுர அடி 2000 ரூபாய் என்ற கட்டணத்தில் ஒரு வீட்டை கட்டுகிறோம் என்று வைத்துக் கொண்டால்..

இங்கே புதிய தொழில்நுட்பத்தில் அதே வீட்டை ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1100 என்ற கட்டணத்தில் கட்டி முடித்து விடலாம். இதில் கட்டிடத்திற்கு ஆகும் செலவு அதிகபட்சம் 60 சதவிகிதம் தான்.

சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் பாலிகார்பனேட், அலுமினியம், பி.வி.சி. துணி மற்றும் இழுவிசைத் துணி போன்ற சமீபத்திய பொருட்களைக் கொண்ட கூரைகளை நிர்மாணிக்கும் தொழில்நுட்பத்தில் இப்போது கட்டிக்கலையில் முன்னோடியாகி இருக்கிறார் சிவகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *