செய்திகள்

10–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை ஆலோசனைக் கூட்டம்: ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் பங்கேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை, பிப்.8–

சென்னையில் மாவட்ட வாரியாக நடைபெறும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதிச் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கு பெறும் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் வரும் 10–ந் தேதி திங்கட்கிழமை முதல் 13–ந் தேதி வியாழக்கிழமை வரை தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் மாவட்ட வாரியாக நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்களும், நகரச் செயலாளர்களும் மற்றும் மாநகராட்சிகளைச் சேர்ந்த பகுதிக் கழகச் செயலாளர்களும், தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுவதாக அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *